நடு ரோட்டில் இபப்டியா பண்ணுவீங்க..? கைதாகிறாரா ரச்சிதா மகாலட்சுமி..! – பரபரப்பு தகவல்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்பொழுது நடு ரோட்டில் கையை விட்டு பைக் ஓட்டிய வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மக்கள் மனதில் மீனாட்சி என்று பதிவு அளவுக்கு மிகவும் பிரபலமான கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ரச்சிதா மகாலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

இதனால் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில், பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி ரசிகர் மத்தியில் தன்னுடைய பெயரை இன்னும் பிரபலப்படுத்தினார்.

அதிலும் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் மகாலட்சுமியை பின் தொடர்ந்து காதல் தொல்லைகள் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பேசுபொருளானது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா மகாலட்சுமிக்கு உண்டான ரசிகர் பட்டாளம் பெருகி இருக்கிறது. சமீபத்தில் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தன்னுடைய ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி இதனை பார்த்த ரசிகர்கள் மாஸாக இருக்கிறது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் இவர் கையை விட்டு பைக் ஓட்டி காட்டுவது இவரை பின்தொடக் கூடிய ரசிகர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும்.

இதே போன்ற தவறை செய்ததற்காக டிடிஎஃப் வாசன் என்பவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அது போல நடிகை மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் இப்படி பைக் ஓட்டுவதை தவிர்க்குமாறு ரச்சிதமாக லட்சுமிக்கு சிலர் அறிவுரையும் கூறி வருகின்றனர். இவருடைய அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.

Summary in English : The recent video posted by actress Rachitha Mahalakshmi on her social media accounts caused quite a stir in the internet world. The video showed her riding a motorcycle with no hands, and sparked an intense debate among netizens. What was meant to be a fun stunt caught everybody’s attention and became a source of controversy.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version