நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்தாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு அடுத்த கட்ட வளர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாக உள்ளார் இவர் சீரியல் மூலம் மட்டும் பிரபலமானதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
பிக்பாஸ் வீட்டில் ஆக்டிவாக பயணித்து வரும் இவர் வாரம்தோறும் நாமினேஷன் இல் இருந்து காப்பாற்றப் பட்டு வருகிறார் இடையில் சக பிக் பாஸ் போட்டியாளர் ராபர்ட் மாஸ்டரின் காதல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.
அதனை பக்குவமாக கையாண்டு வருகிறார். மறுபக்கம் இவரது இரண்டாவது திருமணம் குறித்த தகவல்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் வாழ்ந்து வந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விரைவில் இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்நிலையில் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது கன்னட திரைப்பட இயக்குனர் ஒருவரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் திரைப்பட இயக்குனருமான ஒருவரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்த 6 மாதங்களாக காதலித்து வருகிறார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரை திருமணம் செய்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் கன்னட திரைப்படம் ஒன்றில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடித்திருந்தார். இப்படியான தகவல்கள் நடிகை ரச்சிதா மகாலட்சுமிமியின் இரண்டாவது திருமணம் குறித்த தகவலுக்கு வலுசேர்க்கும் விதமாக இருக்கின்றன.
இப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த விவரத்தை மற்றும் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் சில நேரங்களில் அது உண்மை எனவும் சில நேரங்களில் அது வதந்தி என தெரிய வருவதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று.
அந்த வகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் இரண்டாவது திருமணம் குறித்தும் இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.