நடிகை ராதா கணவருடன் சேர்ந்து என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே எப்போதுமே எவர்கிரீன் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். சில நடிகைகளுக்கு மட்டும் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் இமேஜ் குறைவதில்லை.

அந்த வகையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகைகள், பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

ராதா

கடந்த 1980 களில் மிகப் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகை ராதா. இவர் பாரதிராஜா அறிமுகத்தில் அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த நடிகை ராதா, பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

கடந்த 1966ம் ஆண்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜூன் 3ல் பிறந்த ராதாவின் இயற்பெயர் சந்திரிகா. அவருக்கு ராதா என பெயரை மாற்றியவர் பாரதிராஜா.

சகோதரி அம்பிகா

நடிகை ராதாவின் உடன் பிறந்த சகோதரிதான் நடிகை அம்பிகா. தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் அம்பிகா ராதா இருவருமே முன்னணி நாயகிகளாக இருந்தனர். அதே காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த வகையில் அக்கா தங்கை இருவருமே தமிழ் சினிமாவில் கனவு கன்னிகளாக ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்தனர்.

திருமணம்

கடந்த 1991 ஆம் ஆண்டில் ராஜசேகரன் நாயர் என்ற தொழிலதிபரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற 2 மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற மகனும் உள்ளனர்.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ் சினிமாவில் சாதித்து காட்டிய அம்பிகா, ராதா சகோதரிகளுக்கு சென்னையில் ஏஆர்எஸ் ஸ்டுடியோ என்ற படப்பிடிப்பு தளம் உள்ளது. இங்கு பல படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முதல் மரியாதை படத்தில்…

தமிழ் சினிமாவில் ராதா பல முக்கிய படங்களில் நடித்தார். குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில், ராதா நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிப்பை இந்த படத்தில் ராதா வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போது நடிகை ராதா, சினிமாவில் பெரும்பாலும் நடிப்பதில்லை. வயது 60 களை நெருங்கிய நிலையில், உடல் பருமனாக இருக்கும் நடிகை ராதா, டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறார்.

கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு, அடி தூள் போன்ற கமெண்ட்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தான் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு திருமணம் மிகப் பிரமாண்டமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில்…

நடிகை ராதா திருமணத்துக்கு பிறகு மும்பையில் செட்டிலானார். நடிகை ராதாவும், அவரது கணவர் ராஜசேகரன் நாயர் இருவரும் இணைந்து பிஸினஸில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையில் அவர்களுக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. நிறைய விடுதிகளை கட்டி விட்டுள்ளார்.

கடற்கரை உணவகங்கள்

அது மட்டும் இன்றி கேரளா, திருவனந்தபுரத்தில் கடலோர கடற்கரை உணவகங்கள் நடத்தி வருகிறார். இரண்டு இடங்களில் உள்ள மிக முக்கியமான இந்த உணவகங்களுக்கு சிறந்த ரிச்சர்ட் விருதுகளும் கிடைத்திருக்கிறது.

நடிகை ராதா கணவருடன் சேர்ந்து, ஓட்டல் தொழில் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானம் சம்பாதித்து வருகிறார் என்ற தகவல், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version