ராதிகா அதையெல்லாம் மறந்துட்டாங்க..நிரோஷா மட்டும் நியாபம் வச்சிருக்கா.. ராதா ரவி ஓப்பன் டாக்..!

சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராதாரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி இரண்டாம் தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் வந்தாலும் கூட தன்னுடைய தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நபர் ஆவார்.

தொடர்ந்து அப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல சீரியஸ் வில்லனாக எவ்வளவு சிறப்பாக நடிக்கிறாரோ அதேபோல காமெடி வில்லனாகவும் சிறப்பாக நடிக்க கூடியவர்.

ராதாரவிக்கு கிடைத்த வரவேற்பு:

மேலும் கலகலப்பாக பேசக்கூடியவர் ராதாரவி. அதனாலையே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தில் முக்கியமான பல பொறுப்புகளில் ராதாரவி இருந்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு ராதாரவி நிறைய பேட்டிகளை கொடுக்க தொடங்கினார்.

அதற்கு பிறகு பலருக்கும் தெரியாத பல விஷயங்களை அவர் அந்த பேட்டிகளில் பேசி வந்தார். அதனை தொடர்ந்து 2கே கிட்ஸ்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார் ராதாரவி. தொடர்ந்து இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறார் ராதாரவி.

சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் கூட இப்பொழுது அவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவதை பார்க்க முடியும். அவரது தந்தையான எம்.ஆர் ராதா சமூகப் பிரச்சினைகளை காமெடியின் வழியாக மக்களுக்கு கூறியவர் ஆவார்.

சமீபத்தில் கூறிய விஷயம்:

அவரை தொடர்ந்துதான் அவரது பாணியை பின்பற்றி நடிகர் விவேக்கும் அதேபோல சமூகப் பிரச்சனைகளை காமெடியின் வழியாக பேச தொடங்கினார்.

ராதாரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த விஷயம் அதிக வைரலானது அதில் அவர் கூறும் பொழுது என்னுடைய அப்பாவுக்கு நிறைய மனைவிகள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். ஆனால் ஒரு நான்கு பேருக்கு மட்டும்தான் அவர் மனைவி என்கிற அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்.

அவருடன் பழகும் பல பெண்களுக்கு அவர் சொந்தமாக வீடு வாங்கி கொடுத்து சொகுசான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். ஆனால் மனைவி துணைவி என்கிற அடையாளம் நான்கு பேருக்குதான் கிடைத்தது. அதேபோல அப்பாவோட மனைவிகள் குழந்தைகள் எல்லோருமே தேனாம்பேட்டையில்தான் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

அதே தேனாம்பேட்டையில்தான் ஆரம்பத்தில் ராதிகாவும் இருந்தார் ஆனால் அதை ராதிகா இப்பொழுது மறந்துவிட்டார். ஆனால் நீரோஷா இன்னும் அந்த விஷயத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். நீரோஷாவிற்கு சின்ன வயதில் காலில் புண்ணாக இருக்கும் அவங்க அம்மா அவரை கடல் தண்ணீரில் கொண்டு போய் நிற்க வைப்பார்கள் அதெல்லாம் இப்பொழுது நினைவு வருகிறது என்று அதில் பகிர்ந்து இருந்தார் நடிகர் ராதாரவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version