விஜயகாந்த் காதலித்த நடிகையும்.. 5 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும்.. பகீர் கிளப்பும் நடிகர் ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ராதாரவி மிக முக்கியமானவர். எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி , எம்.ஆர் ராதாவை போலவே வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார். எம்.ஆர் ராதாவை பொருத்தவரை அவரிடம் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

பழைய கருப்பு வெள்ளை சினிமாக்களில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தாலும் கூட அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் வந்தது. அதற்கு முக்கிய காரணம் எம்.ஆர் ராதா சாதாரண வில்லனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து நிறைய நகைச்சுவைகளும் செய்யக்கூடியவர்.

விஜயகாந்த் குறித்த வதந்தி:

இதனால் ஒரு நகைச்சுவை வில்லனாகதான் அவர் அறியப்பட்டார். அவரது அதே வழியை பின்பற்றிதான் ராதாரவியும் பிரபலமானார். ராதாரவி திரைப்படங்களில் நடிக்கும் பொழுது அந்த திரைப்படங்களில் அவர் அதிக காமெடிகள் செய்வார். அதே சமயம் வில்லனாகவும் இருப்பார்.

இந்த விஷயங்களை நிறைய ரஜினி திரைப்படங்களில் பார்க்க முடியும். இந்த நிலையில் விஜயகாந்தின் காதல் குறித்து நடிகர் ராதாரவி இடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

நடிகை ராதிகாவை விஜயகாந்த் காதலித்ததாக அப்பொழுது ஒரு பேச்சு உண்டு. எனவே இது குறித்து ஏதாவது விஷயம் தெரியுமா என்று ராதா ரவியிடம் கேட்டபொழுது அதற்கு பதில் அளித்த ராதாரவி இல்லை அந்த விஷயம் எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.

எம்.ஆர் ராதா மனைவிகள்:

ஆனால் ஏதோ அது சம்பந்தமாக வதந்திகள் போய்க் கொண்டிருந்தது மட்டும் தெரியும். மற்றபடி விஜயகாந்த் காதலித்தாரா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அவரும் என்னிடம் கூறியதில்லை என்று கூறியிருக்கிறார் மேலும் அவர் கூறும் பொழுது எம்.ஆர் ராதாவின் மனைவிகள் குறித்து பேசி இருந்தார் ராதாரவி.

அதில் அவர் கூறும்போது எனது தந்தைக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் இருந்தனர். அதில் ஐந்தாவது மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை ராதிகா என்று கூறியிருந்தார். ஆனால் அந்த ஐந்து மனைவிக்குமே எம்.ஆர் ராதா வீடு வாங்கி கொடுத்து சொத்துக்கள் கொடுத்து மிகவும் நன்றாகதான் பார்த்துக் கொண்டார். யாருக்கும் எந்த குறையும் அவர் வைக்கவில்லை. மேலும் அவர்கள் அனைவரையுமே திருமணம் செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார் ராதாரவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version