நடிகவேள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் ராதாரவி வில்லனாக திரைப்படங்களில் நடித்ததை அடுத்து ஹீரோவாக பல படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் மதராஸ் ராஜகோபாலன், ராதாகிருஷ்ணன் என்ற தனது பெயரை எம் ஆர் ராதா என்று சுருக்கி அமைத்துக் கொண்டார்.
MRR-க்கு ரவுண்ட் டேபிலே கதி..
ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்ட எம் ஆர் ராதா சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று கனமான சூட் கேஸை ஒரே நேரத்தில் தூக்கி செல்லும் அழகை பார்த்து ஆலத்தூர் பாய்ஸ் நாடக கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவரை தனது நாடக கம்பெனியில் இணையும் படி கேட்டுக் கொண்டார்.
அப்படி நாடக கம்பெனிக்குள் நுழைந்த இவர் படிப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்று பிரபலமாக மாறி இருக்கிறார். இவருக்கு இலங்கை இருந்த மனைவி கீதாவுக்கு பிறந்தவர் தான் நடிகை ராதிகா ஆவார்.
மேலும் எம் ஆர் ராதாவிற்கு எம் ஆர் ஆர் வாசு, ராதாரவி, ராணி, செல்வராணி, ரவிகலா, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா என பல பிள்ளைகள் இருந்தார்கள். இதில் எம் ஆர் ஆர் வாசு, ராதாரவி, நிரோஷா ராதிகா போன்றவர்கள் திரையுலகில் நடித்த இருகிறார்கள்.
இந்நிலையில் ராதாரவி தனது அப்பா எம் ஆர் ராதா பற்றி கூறிய விஷயங்கள் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் எப்போதும் அப்பா சினிமாவில் பிஸியாக இருந்த காரணத்தால் இவர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அவர் அம்மா மட்டுமே பார்த்து, பார்த்து செய்து தங்களை வளர்த்ததாக சொல்லி இருக்கிறார்.
அத்தோடு தனது அப்பா சூட்டிங் இல்லாத சமயங்களில் நண்பர்களோடு சேர்ந்து ரவுண்ட் டேபிள் நிகழ்வில் பங்கேற்றுக் கொள்வார். அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அம்மா தான் எல்லாமே..
இப்படி ராதாரவியின் தேவைகளை அறிந்து ஒவ்வொன்றையும் பக்குவமாக அவரது அம்மா மட்டுமே தனக்கு செய்ததாக யூடியூப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ராதாரவி தன் அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தன்னை வளர்த்த அம்மாவின் மூலம் எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் தனது அம்மா தன்னை நன்கு படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நானும் சினிமாவில் நடிக்கப் போனதை அடுத்து அம்மாவின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
மேலும் எனது அப்பா பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அவர் ஒரு மாதிரியான ஆள். எனவே எங்களுக்கு நல்லது கெட்டது என அனைத்தையும் பிரித்தெறிய கற்றுக் கொடுத்தது என்னுடைய அம்மா தான் என்று பேசி இருக்கிறார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி ராதா ரவிக்கு அனைத்தும் கற்றுக் கொடுத்தது அவரது அம்மா.
எனவே தான் ஸஇவர் தாயிற் சிறந்த கோயில் இல்லை என்ற வார்த்தையை சொல்லாமல் சொல்லிவிட்டார் என சொல்லுகிறார்கள்.