இதை போட்டு மார்பகத்தை பெருசு பண்ண சொன்னாங்க.. பகீர் கிளப்பிய கபாலி நடிகை..!

சில நடிகைகள், பெரிய முன்னணி நடிகர்களின் படங்களை நடிக்கும் போது, மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் கவனத்தையும் பெற்று விடுகின்றனர்.

அவர்கள் தொடர்ந்து நடித்தாலும், நடிக்காத சூழலிலும் அவர்களது சினிமா பதிவு என்பது அந்த சில படங்கள் மூலம் பல ஆண்டு காலத்திற்கு ரசிகர் மனங்களில் நீடித்து நின்று விடுகிறது.

ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடித்திருந்தார். அதேபோல் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்தில், பிளாஷ்பேக்கில் வரும் கார்த்தி கேரக்டருக்கு காதலியாகவும் நடித்திருந்தார்.

முதலில் இவர் தமிழில் அறிமுகமான படம் தோனி. நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி என்ற படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்தே, அடுத்து இந்தி படவுலகம் பக்கம் சென்றார்.

மேலாடை இல்லாமல்…

அங்கு பல படங்களில் நடித்து அவர் பெரிய அளவில் வெற்றி பெற்றார். ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தன. இவரை பொருத்த வரை தாராளமான கவர்ச்சி காட்டி நடிப்பவர். குறிப்பாக மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஓரிரு ஹாலிவுட் படங்களில் முழு நிர்வாண காட்சிகளிலும் அவர் நடித்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டில், பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது பாரின்ஸிக் என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது.

பாடி ஷேமிங் பிரச்னைகள்

இந்த வெப் சீரிஸ் தொடர்பான பிரமோ நிகழ்ச்சியில் செய்தியாளர்களை ராதிகா ஆப்தே சந்தித்தார். அப்போது சினிமாவில் தான் சந்தித்த பாடி ஷேமிங் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆரம்ப காலத்தில் சினிமாவில் எனக்கு நிறைய அழுத்தம் இருந்தது. நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் போது என்னிடம் சிலர், எனது உடம்பிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.

மார்பகங்களை பெரிதாக்கினால்…

முதலில் ஒருவர் மூக்கில் மாற்றம் செய்யுங்கள் என்று சொன்னார். பின்னர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து மார்பகங்களை பெரிதாக்கினால், அதிக அளவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று வலியுறுத்தினார்.

என் உடலின் பல்வேறு பாகங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ள சொன்னார்கள். ஒரு கட்டத்தில் போட்டாக்ஸ் ஊசி போட சொன்னார்கள்.

நான் அவர்களுக்கு சொன்ன எதையுமே செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். இது எனது வளர்ச்சிக்கு தடையாக இருந்தது.

இது போன்ற சம்பவங்கள்தான், நான் என்னுடைய உடலை அதிகம் நேசிக்க உதவியது. இப்போது நான் என் உடலை மிகவும் நேசிக்கிறேன் என்று. அந்த நேர்காணலின் போது வெளிப்படையாக பேசி இருக்கிறார் ராதிகா ஆப்தே.

ஊசி போட்டு மார்பகத்தை பெருசு பண்ண சொன்னாங்க என்று சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில், சிலர் வற்புறுத்தியதாக பகீர் கிளப்பியிருக்கிறார் கபாலி நடிகை ராதிகா ஆப்தே. இது தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version