“இன்னைக்கு நீ எங்க இருக்கன்னு பாரு..” பறக்கும் விமானத்தில் வடிவேலு செய்த வேலை.. ரகசியம் உடைத்த ராதிகா..

பழம்பெரும் நடிகரான எம் ஆர் ராதாவின் மகளான நடிகை ராதிகா தன் தந்தையை போலவே போல்டான லேடி மட்டும் அல்லாமல் திரைப்படங்களோடு நின்று விடாமல் சின்னத்திரைகளும் முத்திரை பதித்தவர்.

பன்முக திறமைசாலியான நடிகை ராதிகா அண்மையில் விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு பார்த்த வேலையை பற்றி பக்காவாக சொன்னதை பார்த்து இணையமே கிடுகிடுத்துப் போய்விட்டது.

நடிகை ராதிகா..

மிகச்சிறந்த சினிமா பேக்ரவுண்டை கொண்டிருந்த நடிகை ராதா கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பை மெருகேற்றிய காட்டி இருக்கிறார். மேலும் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்றவர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் கவர்ச்சி காட்டி நடிப்பதை தவிர்த்து விட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை செய்து நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

விமான நிலையத்தில் வடிவேலு..

அரசியலையும் விட்டு வைக்காத இவர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து அதிமுகவில் இணைந்தார். இதனை அடுத்து அந்த கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். மேலும் 2021 இல் சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக திகழ்கிறார்.

ஒரு சமயம் நடிகர் வடிவேலுவை விமான நிலையத்தில் சந்தித்த போது இவரது மகன் ராகுல் மிகச் சிறுவனாக இருந்தால் அப்போது அந்தச் சிறுவன் வடிவேலுவை பார்த்து நீங்கள் எங்கள் அப்பா படத்தில் நடிக்க போறீங்களா? அங்கிள் என்று கேட்டிருக்கிறார்.

இதனைக் கேட்க வடிவேலு தம்பி நான் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுப்பதில்லை என்று குதர்க்கமாக பேசியதை தற்போது கூறி இருக்கிறார்.

ரகசியம் உடைத்த ராதிகா..

மேலும் ராதிகா பேசும் போது இப்போது நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம். வடிவேலு எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர் என் கணவரோடு இணைந்து நடித்தால் அவருக்கு வாழ்வு வந்துவிடும் என்று சொன்னது எந்த விதத்தில் பொருந்தும் என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

மேலும் வடிவேலுவை இவருக்கும் நன்றாக பிடிக்கும். அவரது நடிப்பை ரசித்து பார்ப்பேன் என்று கூறிய ராதிகா எந்த ஒரு மனிதருக்கும் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அகம்பாவமோ, கர்வமோ ஏற்பட்டால் கடைசியில் நிலைமை எப்படித்தான் ஆகும் என்பதற்கு வடிவேலுவை பூடகமாக உதாரணமாக காட்டி இருக்கிறார்.

இந்நிலையில் ராதிகாவின் பேச்சு தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு ஏற்கனவே வடிவேலுவின் பெயர் டேமேஜ் ஆன நிலையில் ராதிகாவின் பேச்சும் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ன மனுஷன்யா இவரு என்ற ரீதியில் பேசி இருக்கிறார்கள்.

எனவே யாராக இருந்தாலும் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எப்போதும் மறந்து விடாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் மேலும், மேலும் உயரமுடியும் என்பதை உணர்ந்து கொண்டால் இது போன்ற பேச்சுக்கள் ஏற்படாமல் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version