தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர்.
ராதிகா
அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, கிழக்கு போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ராதிகா, மிகச்சிறந்த நடிகை என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த அவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ராதிகா.
இப்போது தனுஷ், விஜய், பிரபுதேவா, அஜித் போன்றவர்களுக்கு சில படங்களில் அம்மாவாகவும் நடித்திருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. இதுதவிர ராடன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சினிமா மற்றும் சீரியல்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
சரத்குமாருடன் 3வது திருமணம்
நடிகர் ராதிகா, ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 3வதாக சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் வேட்பாளர்
சரத்குமார் ஆரம்பித்த சமத்துவ மக்கள் கட்சி சார்பில், இப்போது விருதுநகர் தொகுதியில் ராதிகா நாடாளுமன்ற வேட்பாளராக பாஜக கூட்டணியில், போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவு வந்த பின்பே அவர் எம்பி ஆவாரா இல்லையா என்பது தெரியவரும்.
நடத்தை குறித்து…பயில்வான் ரங்கநாதன்
இந்த சூழ்நிலையில் நடிகர் எம் ஆர் ராதா குடும்பம் குறித்தும், நடிகை ராதிகா குறித்தும் தன்னுடைய வீடியோ ஒன்றில் பேசியிருந்தார் பிரபல நடிகர். அந்த வீடியோவில் ராதிகாவின் தாய் நடத்தை குறித்து மோசமான அர்த்தம் தொனிக்கும் வகையில் சில விஷயங்களை பேசி இருந்தார் பயில்வான் ரங்கநாதன்.
அதாவது ராதிகாவின் தாய் கருவுற்றிருந்த போது அவருடைய கணவர் சிறையில் இருந்தார். நான் ஒன்று சொன்னால்.. நூறு புரிஞ்சுக்கோங்க.. என்று பேசி இருந்தார். இது ராதிகாவின் தாயின் நடத்தையை கேலி செய்யும் விதமாக அமைந்தது என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
என்ன பேசி இருக்கிறாய்
இதை தொடர்ந்து கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை பார்த்த ராதிகா, வீடியோவில் என்ன பேசி இருக்கிறாய் என்னுடைய அம்மா தே****வா என்று பயில்வானிடம் சண்டை போட்டு இருக்கிறார். இதையும் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில் அவர் வாயாலேயே பதிவு செய்திருக்கிறார்.
என்ன சொல்வது
அவர் கூறியதாவது, நான் யாரையும் பற்றியும் தவறாக பேசவில்லை. நாம் பாராட்டினால் கண்டுகொள்ளாத பிரபலங்கள், நாம் ஏதாவது குறை கூறினால் மட்டும் சண்டைக்கு வந்து விடுகிறார்கள்.. என்ன சொல்வது என தெரியவில்லை.. என கூறியிருக்கிறார். இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பயில்வான் ரங்கநாதன் சூசகமாக பேசியதை வைத்து, எங்கம்மா தே***வா..? அப்படி எதற்காக பேசினாய் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதனை கிழித்தெடுத்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.