என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் மிக அற்புதமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கிழக்கு போகும் ரயில் படத்தில், நடிகர் சுதாகருக்கு ஜோடியாக ராதிகாவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதி ராஜா.

அதன்பின், கிழக்குச் சீமையிலே படத்தில் இன்னொரு பாசமலர் படம் போல, விஜயகுமார் – ராதிகாவை அண்ணன் தங்கையாக காட்டியிருந்தார் அதே பாரதிராஜா.

ராதிகா

பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், நடிகை ராதிகா அதாவது குயிலு குரலாக பின்னணியில் ஒலித்தது நடிகை ராதிகா குரல்தான்.

நடிகர் எம் ஆர் ராதா மகள், நடிகர் சரத்குமார் மனைவி, நடிகர் ராதாரவி சகோதரி, நடிகை நிரோஷாவின் சகோதரி, ராடன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் திரைப்படங்கள், டிவி சீரியல்கள் தயாரிப்பாளர் என பல அடையாளங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி டிவியில் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி போன்ற சீரியல்களிலும் நடித்தவர்.

3வது திருமணம்

ஆரம்பத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு அவரை பிரிந்தார். மீண்டும் 2வது ரிச்சர்ட் என்ற ஆங்கிலேயரை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பெற்றார்.

அந்த ஆங்கிலேய கணவரை பிரிந்த பிறகு, சில ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்தார். அதன்பிறகு 3வது திருமணமாக, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார்.

சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “நான் வேட்டைமன்னன் முதல் பாதியை பார்த்தப்போ..” நடிகர் கவின் கூறிய பகீர் தகவல்..

நடிகர் சரத்குமார் – சாயாதேவி என்ற தம்பதிக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். சாயாதேவியை பிரிந்து விவாகரத்து செய்த நிலையில்தான் ராதிகாவை சரத்குமார் 2வது திருமணம் செய்தார்.

தாத்தா என்று அழைப்பான்…

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ராதிகா பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

எங்களை தாத்தா பாட்டி என்று எங்கள் பேரன் அழைக்க மாட்டான். அவரை ( சரத்குமாரை) மட்டுதான் தாத்தா என்று அழைப்பான். அது ஸ்ட்ரிட் ஆர்டர்.

என்னை பாட்டி என்று கூப்பிட மாட்டான். மம்மா என்றுதான் அழைப்பான். ரொம்பவும் க்யூட் ஆக இருக்கிறான்.

என் மகளை, என் மகளாக மட்டுமே பார்த்திருக்கிறேன். இப்போது ஒரு குழந்தைகளுக்கு தாயாக அவளை பார்க்கிறேன்.

அழகான தருணங்கள்

சிலர் வாழ்க்கையில் சில விஷயங்களில் குழப்பமான நேரங்களில், வாழ்க்கை என்றால் என்ன, இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று நினைப்பதுண்டு. இதெல்லாம்தான், ஒண்ணுமே கிடையாது.

இதையும் படியுங்கள்:  வடிவேலு இதை பண்ணவே விட மாட்டான்.. மனுஷனே கிடையாது.. நடிகர் காதல் சரவணன் விளாசல்..!

இந்த மாதிரி வாழ்க்கையில் அழகான தருணங்கள்தான் வாழ்க்கை மறுபடியும், மறுபடியும் கற்றுக்கொடுகிறது என்று கூறியிருக்கிறார் நடிகை ராதிகா.

இந்த நேர்காணலில், என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. மம்மா என்றுதான் அழைப்பான் என்று மிக சந்தோஷமாக ராதிகா கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam