ராயன் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவை பாருங்க..!

ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். ஏனெனில் 50 திரைப்படங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களுக்குமே கை கூடுவதில்லை.

எவ்வளவோ நடிகர்கள் 10 படங்களுக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ் சினிமாவில் இருந்து விலகுகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

ராயன் திரைப்பட வெற்றி:

தனுஷ் திரைத்துறைக்கு வந்த பொழுது அவர் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்து பெரிய நடிகராக வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் பார்ப்பதற்கு ஒல்லியாக மிகவும் சின்ன பையனாக இருந்தார் தனுஷ்.

மேலும் அந்த சமயத்திலேயே அவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளாகி வந்தார். இந்த நிலையில் கண்டிப்பாக தனுஷ் தாக்கு பிடிக்க மாட்டார் என்பதுதான் பலரது எண்ணமாக இருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி பல விமர்சனங்களையும் மீறி தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்சமயம் வெளியான ராயன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மட்டும் 100 கோடியை தாண்டி வசுல் செய்யும் பட்சத்தில் தனுஷிற்கு முக்கியமான படமாக இது இருக்கும்.

ராகவா லாரன்ஸ் பதில்:

மேலும் அவரது சம்பளமும் இதனால் உயரும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ராயன் திரைப்படம் முழுவதும் முழுக்க சண்டை காட்சிகளை கொண்ட படம் என்றாலும் கூட அதில் ஃபேமிலி செண்டிமெண்ட் விஷயங்களையும் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் இயக்கும் இரண்டாவது திரைப்படம் இந்த திரைப்படம் ஆகும். இந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவித்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும்போது ராயன் திரைப்படத்தை நான் நேற்றுதான் பார்த்தேன் தனுஷ் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வித்தியாசமான நடிப்பை எஸ் ஜே சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது நாம் தமிழ் சினிமாவிற்கு உலக தரத்திலான ஒரு இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் தனுஷ் என்று கூறி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இது தற்சமயம் பிரபலமாகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version