நடிகர் ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்தாலும், ரசிகர்கள் கொடுத்த பணம் தான் அவையனைத்துமே என்றாலும் கூட, அவர்களுக்கு அதில் ஒரு சிறுபகுதியை, ஒரு சின்ன தொகையை உதவியாக செய்வதில் பல நடிகர்களுக்கு மனம் வருவதில்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் இதுவரை எந்த காலகட்டத்திலும் மக்களுக்காக இறங்கி வந்து எந்த விதமான உதவிகளையும் இதுவரை செய்ததாக தெரியவில்லை.

அப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. வார்டு கவுன்சிலர் கூட தங்கள் வார்டு மக்களுக்கு பல விதங்களில் உதவ முன்வரும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில் நோட்டுப் புத்தகங்கள் கூட கொடுக்க முன்வராத ‘மிகப்பெரிய நன்கொடையாளர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் அமர்க்களம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில், காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் காட்சியில் அவர் நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ், இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

அவரது இயற்பெயர் முருகையன். சிறிய வயதில் அவருக்கு மூளையில் கட்டி வந்து, உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது அவரது அம்மா கண்மணி, ராகவேந்திரர் சுவாமியிடம் முறையிட்டு, தன் மகனை காப்பாற்றுமாறு வேண்டினார். லாரன்ஸ் குணமடைந்த நிலையில், அதன் பிறகு தனது மகனுக்கு ராகவா லாரன்ஸ் என்று அவர் பெயர் மாற்றம் செய்து, அவரது அம்மா அழைத்தார்.

ராகவா லாரன்ஸ்சுக்கு எல்வின் என்ற தம்பி இருக்கிறார். இவரும் இப்போது கதாநாயகனாக நடிக்க முயற்சித்து வருகிறார்.

ராகவேந்திரர் கோவில்

ராகவா லாரன்ஸ் கடவுள் பக்தி, ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர் குறிப்பாக ராகவேந்திரர் தீவிர பக்தர். அதற்காக அம்பத்தூரில் ராகவேந்தர் சுவாமி கோவில் கட்டி இருக்கிறார். மேலும் இதுவரை 145 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய நேரடியாக உதவியவர். அதேபோல் 75 பேருக்கு ஆபரேஷன் செய்யவும் உதவி இருக்கிறார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளை தன்னுடைய பராமரிப்பில் வைத்து, அவர்களுக்காக ஆதரவற்றோர் இல்லம் நடத்தி, அவர்களை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் 22 வயதில், தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு மிகப்பெரிய நடிகராக, பல கோடிகள் சம்பளமாக பெறும் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார்.

அம்மாவுக்காக கோவில்

ராகவா லாரன்ஸ் தன் தாய் மீது மிகப் பெரிய அளவில் அன்பும் அக்கறையும் கொண்டவர். தனது தாயை தெய்வமாக மதிப்பவர். அதனால் ராஜஸ்தானிலிருந்து விலை உயர்ந்த கற்களை கொண்டு வந்து, பூவெடுத்தவல்லி என்ற அவருடைய அப்பா ஊரில், தன் தாய்க்காக அவர் ஒரு கோவில் கட்டி இருக்கிறார்.

மனைவி லதா

ராகவா லாரன்ஸ் மனைவி பெயர் லதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி பெயரும் லதாதான். சூப்பர் ஸ்டாரின் மிகச் தீவிர ரசிகரும் சீடருமான ராகவா லாரன்ஸ் மனைவி பெயரும் லதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை மக்களுக்காக, கஷ்டப்படும் மக்களுக்காக உதவி செய்வதில், பல கோடிகளை செலவு செய்து வருகிறார். அதற்கு சமூக ஆர்வலராக உள்ள அவரது மனைவி லதாவும், அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறார்.

சமூக செயல்பாடுகளில் ஆர்வம்

இப்போது ராகவா லாரன்ஸ் – லதா தம்பதியின் மகளும் இந்த சமூக செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டி இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியும் கைகோர்த்து…

வழக்கமாக கணவன் இதுபோன்ற உதவிகளை கோடிக்கணக்கில் செலவு செய்தால், மனைவி தரப்பிலிருந்து எதிர்ப்பு தான் வரும். ஆனால் ராகவா லாரன்ஸ்சை பொருத்தவரை அவரது மனைவியும் அவருடன் கைகோர்த்து இது போன்ற சமூக நலப் பணிகளில் அக்கறை காட்டி, மக்களுக்கு உதவுவதில் அவரும் முன்னிலை வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவி லதாவும், தன் கணவரை போலவே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமும், அக்கறையும் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version