சினிமா துறையைப் பொறுத்தவரை திறமையான நடிகர்கள் மறைந்தாலும் அவர்களது வரலாறு எப்போதும் பேசும்படியாக தங்களுக்கான அடையாளத்தை விட்டு செல்வார்கள்.
அப்படித்தான் மிகச்சிறந்த வில்லன் நடிகராகவும் குணசத்திர நடிகர் ஆகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன்.
நடிகர் ரகுவரன்:
1958 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த ரகுவரன் தனது தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் குடி பெயர்ந்தார்கள்.
அதன் பின்னர் தமிழ்நாட்டிலே படித்து வளர்ந்த ரகுவரன். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் .
அதை அடுத்து கூட்டு புழுக்கள் , கைநாட்டு, மைக்கில் ராசா , ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களை காட்டிலும் வில்லனாக நடித்த வேடங்கள் அதிக அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது .
நடிப்பின் அரக்கனாக ரகுவரன்:
மக்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். சம்சாரம் அது மின்சாரம் , அஞ்சலி போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பை மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது.
தமிழை தவிர்த்து ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி மிரட்டி இருக்கிறார்.
குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும்.
அதிரடியான வில்லனாக நடித்து வந்த ரகுவரன் ரஜினிகாந்துடன் பாட்ஷா திரைப்படத்தில் நடித்தது இன்று வரை யாராலும் மறக்க முடியாது.
மெகா ஹிட் திரைப்படங்கள்:
அத்துடன் அர்ஜுனின் “முதல்வன்” திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிக்காட்டி நடித்து காலத்தால் அழியாத படமாக பார்க்கப்பட்டு வருகிறது .
தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்த ரகுவரன் வயதாக பின்னர் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதை விட்டுவிட்டு குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படித்தான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “யாரடி நீ மோகினி” திரைப்படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருப்பார் .
அதுதான் அவரது கடைசி திரைப்படமும் கூட. 2008 ஆம் ஆண்டு ரகுவரன். உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
முன்னதாக பிரபல நடிகை ஆன ரோகினியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரகுவரன் பின்னர் அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004 ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
ரகுவரன் குறித்து முன்னாள் மனைவி:
இவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த தனது முன்னால் கணவரான ரகுவரன் குறித்து பேசி இருக்கும் நடிகை ரோகினி,
எனக்கு கல்யாணம் ஆன புதிதில் ரகுவரன் என்கிட்ட ரொம்ப கோபமா பேசியிருந்தார். அது கல்யாணமான புதுசு என்றதால் எங்களுக்குள் புரிதல் கொஞ்சம் கம்மியா இருந்தது.
என்ன இந்த மனுஷன் இப்படி பேசுறாரு அப்படின்னு நானே கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டேன். நான் ஒரு கட்டத்தில் சமாதானம் செய்துகூட பார்த்தேன்.
ஆனால், அவர் சமாதானம் ஆகாமல் மீண்டும் மீண்டும் வலுக்கட்டாயமாக என்னுடன் சண்டை போட ஆரம்பித்தார்.
இதை பார்த்து அவருடைய அம்மா என்னிடம் வந்து, அவன் நடிக்கும் அடுத்த படத்தில் சினிமாவில் என்ன கேரக்டரில் நடிக்கிறான் என்று கேளு அப்படின்னு சொன்னாங்க.
அதன் பிறகு அஞ்சலி திரைப்படத்தில் அவ்வளவு அன்பாக என்னுடன் பேசி பழகினார் . எனவே ரகுவரன் திரைப்படங்களில் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறாரோ அந்த கேரக்டராகவே நிஜ வாழ்க்கையிலும் மாறிவிடுவார்.
கல்யாணம் ஆனதும் அப்படி நடந்துக்கொண்டார்:
உண்மையிலேயே அவர் அப்படி நடந்து கொள்வார். அதனால்தான் அவரது நடிப்பு இன்றும் பேசும்படியாக இருக்கிறது .
அந்த அளவுக்கு அவர் மிகச்சிறந்த நடிகர் என ரோகிணி அந்த பேட்டியில் ரகுவரனை குறித்து பெருமையோடு பாராட்டி பேசி இருக்கிறார்.
இதன் மூலம் ரகுவரன் சினிமாவில் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த படம் முடியும் வரை தன்னுடைய வீட்டில் கூட அந்த கேரக்டராகவே வாழ்ந்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.