நடிகையை காதலித்து மன உளைச்சலில் விழுந்த ரகுவரன்..! வேறு நடிகரை திருமணம் செய்த நடிகை..!

தமிழ் திரையுலகில் மிரட்டல் வில்லனாக ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த நடிகர் ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர்.

இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற பிறகு இளங்கலை பட்டத்தை பெற்றார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் ஆகவும் குணசித்திர வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்..

இவர் தனது வேறுபட்ட குரலில் பேசி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.மேலும் வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் 1982-ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களுக்கு சொந்தக்காரரானார் இவர் நடிப்பில் வெளி வந்த கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த இவர் சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியவர்.

இவரது வில்லத்தனமான நடிப்பை நீங்கள் ஜென்டில்மேன் திரைப்படத்தில் பார்த்து தெரிந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் இவரது பாடி லாங்குவேஜ், குரல் போன்றவை படு வித்தியாசமாக இருக்கும்.

இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது பிரபலமாக இருந்த நடிகை ஒருவரை காதலித்திருக்கிறார். அந்த நடிகையும் இவரோடு கூட்டுப்புழுக்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த நடிகை நோ சொன்னதால் மன உளைச்சலில்..

மேலும் கூட்டுப் புழுக்கள் படத்தில் நடித்த அமலாவைத் தான் ரகுவரன், உருகி உருகி காதலித்து இருக்கிறார். இந்த விஷயத்தை நேரடியாக அமலாவிடம் கூறி இருக்கிறார். ஆனால் அமலாவோ அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதனால் ரகுவரன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி போதை பழக்கவழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் திரையுலக வாழ்க்கை மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் தடுமாற்றம் ஏற்பட்டதோடு இரண்டு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இவரை நடிகை ரோகிணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்ற நிலையில் குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரகுவரனை விட்டு ரோகிணி பிரிந்து செல்ல நேர்ந்தது.

மேலும் ரகுவரன் குடி பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் திணறி உடல் நல குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு காலமானார்.

இவர் நடிப்பில் வெளி வந்த பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் போன்ற படங்கள் திரையுலகம் உள்ள வரை இந்த நடிப்பு அரக்கனின் பெயரை சொல்லும்.

வேறு நடிகரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை..

அது மட்டுமல்லாமல் நடிகர் ரகுவரன் காதலித்த நடிகை அமலா ரகுவரனை திருமணம் செய்து கொள்ளாமல் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டும் அல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் படத்தில் மட்டுமே வில்லத்தனத்தை காட்டி வந்த ரகுவரன் நிஜ வாழ்க்கையில் ஒரு குழந்தையை போல  இருக்கிறார். அத்தோடு தான் காதலித்த பெண் தனக்கு கிடைக்காததால் மன உளைச்சல் காரணமாக மற்றொரு நடிகையை திருமணம் செய்து கொண்டும் அவர் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version