அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

சினிமாவில் வில்லனாக நடித்தாலும், கதாநாயகனை விட அதிக பெயரும் புகழும் சம்பாதிக்க சில நடிகர்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரகுவரனுக்கு முக்கிய இடம் உண்டு.

ரகுவரன்

நடிகர் ரகுவரன் எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் வெளுத்து வாங்கும் மிகச்சிறந்த நடிகர். வில்லன், மோசமான போலீஸ் அதிகாரி, குடிகார கணவன், கடத்தல் மன்னன், ஏமாற்று பேர்வழி என எந்த கேரக்டர் தந்தாலும் அதில் தனது நடிப்பில் தனி முத்திரை பதிக்கும் ஒரு தரமான நடிகர்.

நடிகர் ரகுவரன் பிஏ வரை படித்த பட்டதாரி. இவர் கடந்த 1982ம் ஆண்டில் வெளியான ஏழாம் மனிதன் என்ற படத்தில்தான் முதன்முறையாக அறிமுகமானார். கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், கைநாட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார் ரகுவரன்.

300 படங்களுக்கு மேல்…

ஆனால் வில்லன் நடிப்பில் ரசிகர்களை ரகுவரன் வெகுவாக கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என பல மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் ரகுவரன்.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..

முதல்வன், பாட்சா படங்களில்…

சம்சாரம் அது மின்சாரம் படத்தில், சிதம்பரம் என்ற கேரக்டரில் நடுத்தர வயது குடும்பஸ்தனாக வாழ்ந்து காட்டியிருப்பார் ரகுவரன். முதல்வன் மற்றும் பாட்சா ஆகிய 2 பபடங்களும் ரகுவரன் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

ரகுவரன் – ரோகிணி திருமணம்

ரகுவரனுக்கும், ரோகிணிக்கும் 1996ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களது வாழ்க்கை துவக்கத்தில் மகிழ்ச்சியானதாக தான் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2004ம் ஆண்டில் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டனர்.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் அது தெரிய பானுப்ரியா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

ரகுவரன் – ரோகிணி தம்பதிக்கு சாய் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு தற்போது 25 வயதாகிறது. ரகுவரன் கடைசியாக நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் தனுஷ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தில் ரகுவரன், தனுஷின் அப்பாவாக நடித்திருந்தார்.

அப்பாவை போலவே உயரமாக…

ரகுவரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இந்நிலையில் நடிகை ரோகிணி வளர்ந்த தனது மகனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா என அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version