மறைந்த வில்லன் நடிகரான ரகுவரனின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அச்சு, அசல் அப்பாவை போலவே இவர் இருப்பது தான் அதற்கு காரணம் எனக் கூறலாம்.
தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனித்துவமான பாணியை வகுத்துக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த நடிகர் ரகுவரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் அதற்குத் தேவையான நடிப்பு நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.
சினிமாவில் நடிக்க நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட இவர் ஏழாம் மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த இவருக்கு அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து இவர் ஆன்ட்டி ஹீரோவாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். பொதுவாக திரையுலகில் வில்லன் என்றாலே குண்டான உடல்வாகு, மிரட்டும் தோரணை, கனமான குரல் இருக்க வேண்டும் அந்த நிபந்தனையை உடைத்து வில்லன் என்றால் இப்படியும் இருக்கலாம் என்று சொல்ல வைத்தார்.
தன்னுடைய குரல் மூலம் அனைவரையும் மிரட்டி வந்த ரகுவரன், அவரது பார்வை, மொழி இவற்றை வைத்து வில்லனாக கோலிவுட்டை கலக்கினார். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படமான பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து அனைவரையும் மிரட்டி விட்டார். இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இனி அந்த மார்க் ஆண்டனியாக ரகுவரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறி இருந்ததை இந்த வேளையில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் ரகுவரன் டாப் வில்லனாக மாறி நடிகை ரோகிணியை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டால் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் இருக்கிறான்.
தற்போது இந்த ரிஷிவரனின் போட்டோக்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற ரோகிணி தன் மகன் மீது அளவுகடந்த பாசத்தோடு இருந்து வருகிறார். மேலும் ரகுவரனும் அதே அளவு பாசத்தை தன் மகன் மீது வைத்திருந்தவர். குடிப்பழக்கத்தின் காரணத்தால் இறந்துவிட்டார்.
தற்போது ரிஷிவரனை பார்க்கும்போது தந்தையைப் போலவே உயரம், தோரணை, ஜாடை என அச்சு அசலாய் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துள்ளனர். 25 வயதாகும் இவர் தற்போது இசையில் தீவிர கவனம் செலுத்தி வருவதோடு ஆங்கில மொழியில் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.