” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகும் உளுந்து ராகி கஞ்சி…!” நீங்களும் செய்து அசத்தலமே…!

 இன்று இருக்கக்கூடிய ராக்கெட் யுகத்தில் நாம் நமது உணவுகளை பாரம்பரிய முறைப்படி செய்து சாப்பிடுவதற்கு நேரம் போதுமானதாக இல்லை. எனவே துரித உணவுகளை விரும்பி நாம் சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது.

 இந்த பாதிப்புகளில் இருந்து சற்று விலகி நாம் வெளியே வர கிடைக்கின்ற விடுமுறை நாட்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உளுந்து ராகி கஞ்சியை எப்படி வைப்பது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 உளுந்து ராகி கஞ்சி வைக்க தேவையான பொருட்கள்

  1. உளுந்து  200 கிராம்
  2. ராகி 200 கிராம் 3.ஏலக்காய் 3
  3. தண்ணீர் இரண்டு கப்

செய்முறை

முதலில் எடுத்து வைத்திருக்கும் உளுந்து 200 கிராம் மற்றும் ராகி 200 கிராம்யை அடுப்பில் வாணலியை வைத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுக்கவும்.

அவ்வாறு வறுக்கப்பட்ட எந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக பொடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த பொடிகளை நைசாக சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் இந்த மாவில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் இடைவிடாமல் கிளற வேண்டும்.

 இதனை அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு தேவையான ஏலக்காய் பொடி சேர்த்து விடுங்கள். உப்பு தேவையானில் போட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால் அப்படியே குடிக்கலாம்.

இப்போது எல்லோருக்கும் உகந்த உளுந்து ராகி கஞ்சி தயார். இதனை மிதமான சூட்டில்  பருகுவதால் எண்ணற்ற நன்மைகளை நீங்கள் பெறலாம்.

 குறிப்பாக பெண்களுக்கு வேண்டிய இரும்பு சத்து கிடைப்பதோடு மட்டுமல்லாமல் இடுப்பு எலும்பை பலப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.

எனவே முடிந்தவரை இந்த கஞ்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் வீட்டில் வைத்து நீங்கள் குடும்பத்தோடு ஒரு நேரம் பருகி பாருங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …