கிறுகிறுன்னு வருதே.. ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம் முடித்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு தெரியுமா..?

சினிமாவில் சில படங்களில் நடித்தாலே போதும். சில நடிகைகள் தங்களது வசீகர அழகால் வெகு விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங்

அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நிறைய நடித்திருக்கிறார்.

தெலுங்கானா மாநில அரசின் தூதுவராக ரகுல் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்- என்ற திட்டத்தின் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமானார்.

தீரன் அதிகாரம் 1

அடுத்து மகேஷ்பாபு உடன் ஸ்பைடர், அதன்பிறகு கார்த்தியுடன் தீரன் அதிகாரம் 1, அடுத்து சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் அவர் நடித்தார்.

இப்போது சமீபத்தில் வெளியான அயலான் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

கனவுடன் இருந்தவர்

18 வயதில் இருந்தே மாடலிங் துறையில் இருந்து வந்த ரகுல் ப்ரீத் சிங் ஆரம்பத்தில் இருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவில் முன்னணி கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் வெற்றி பெற முடியவில்லை.

அழகாக இருந்தாலும், சில முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டால் மட்டுமே, தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும்.

ஆனால் ரகுல் ப்ரீத் சிங் எதிர்பார்த்த அளவில் அவருக்கு சினிமாவில் வரவேற்பு இல்லை.இதையடுத்து அவர் திடீரென திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

தொழிலதிபர் ஜாக்கி பாக்னானி

பாலிவுட் சினிமாவில் முன்னணி படத் தயாரிப்பாளர் மற்றும் பெரிய தொழிலதிபரான ஜாக்கி பாக்னானி என்பவரை நேற்று, ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துக்கொண்டார்.

நேற்று கோவாவில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்தி படங்களின் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபராக உள்ள ஜாக்கி பாக்னானியின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிறுகிறுன்னு வருதே…

ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம் முடித்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு ரூ. 41 கோடி என்று கேட்டவுடன் தலை கிறுகிறுன்னு வருதே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version