புரிஞ்சவன் பிஸ்தா..! நீங்க ஆணா.. பெண்ணா.. என்ற கேள்விக்கு பிக்பாஸ் ரைசா கொடுத்த பதிலை பாருங்க..!

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில்  மக்கள் மத்தியில் இவர் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கப்பட்ட போது அதன் முதல் சீசனில் பங்கு பெற்ற பலரும் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றனர்.

அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது. இதுவரை அப்படி ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்த்ததில்லை என்பதால் முதல் சீசனில் பங்குபெற்ற அனைவருமே இப்பொழுது ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர்.

திரையில் வாய்ப்பு:

அப்படியாக நடிகை ரைசாவும் திரைத்துறையில் வாய்ப்பை பெறுவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கிய காரணமாக இருந்தது. வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு துணைக் கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன்.

ஆனால் அவர் முதன்முதலாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் என்றால் அது பியார் பிரேமா காதல் திரைப்படம்தான். அந்த திரைப்படத்தில் சிந்துஜா என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் கொஞ்சம் அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார் ரைசா வில்சன்.

இதனை அடுத்து ரைசா வில்சனுக்காகவே அந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பார்த்து வந்தனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப் ஐ ஆர் என்று ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடிக்கவும் செய்தார்.

பேட்டியில் கொடுத்த பதில்:

பொதுவாகவே சினிமாவில் கதாநாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பதே கிடைப்பது கடினமாகும். அதற்கு அவர்கள் நிறைய போராட வேண்டி இருக்கும். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் ரைசா வில்சன்.

இந்த நிலையில் அடிக்கடி பேட்டிகள் கொடுப்பது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிடுவது என்று செய்து வருக்கிறார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் இவரிடம் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்று கேட்டிருந்தன.

இந்த கேள்விக்கு பதில் அளித்த ரைசா வில்சன் நான் ஒரு பூனை என்ற பதில் அளித்து இருந்தார். இந்த பதிலுக்கு அர்த்தம் பலருக்கும் புரியவில்லை ஆனால் இது குறித்து பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் புரிகிறது என்று போட்டு புரிந்தவன் பிஸ்தா என்றும் போட்டிருக்கின்றனர். அது என்னவென்று உங்களுக்காவது புரிகிறதா புரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version