வைரமுத்துவை இளையராஜாவுக்கு பிடிக்கல.. ஆனால்.., ஒன்னு நடந்தது.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

தமிழ் திரை உலகில் இது வரை 7000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மிகச் சிறந்த பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் என சொல்லலாம்.

இவர் இது வரை ஏழு முறை தேசிய விருதுகளை வென்றெடுத்திருக்கிறார்.மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி தமிழர்களின் கனவு கவிஞராக உலா வருகிறார்.

வைரமுத்துவ.. இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை..

இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், காதல் பாடல்களோடு தத்துவ பாடல்களையும் எழுதி இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.

இந்த சூழ்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் ராஜ கம்பீரன் இளையராஜா வைரமுத்து குறித்து பேசி இருக்கும் பேச்சு ரசிகர்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.

இதற்குக் காரணம் படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசை முக்கியமா? மொழி முக்கியமா? என்று வைரமுத்து பேசியதை அடுத்து பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி தந்திருக்கும் கங்கை அமரன் வைரமுத்துவை பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்திருக்கிறார்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று..

இந்நிலையில் ராஜ கம்பீரன் பேட்டியில் வைரமுத்து தன் மனைவி பொன்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றாலும் அவரது மனைவி வைரமுத்துவை விட வயது அதிகமானவர் என்பதால் பல போராட்டங்களுக்கு பிறகு தான் திருமணம் நடந்தது.

அத்தோடு சினிமா துறைக்கு வர வேண்டிய எண்ணம் இல்லாமல் வைரமுத்து இருந்ததாகவும், நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பு வேலையை செய்து வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார்.

அத்தோடு சினிமா பற்றிய எண்ணம் அவருக்குள் வந்து விட எழுதிய தீர்ப்புகள், வைகறை மேகங்கள் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை பாரதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

இந்த கவிதை நூல்களை இலங்கைக்குச் செல்லும் போது விமானத்தில் பாரதிராஜா படித்து விட அந்த வரிகள் அவருக்கு பிடித்துப் போக அந்த கவிதை வரிகளில் சொந்த ஊர் வாசம் வீசியதை அடுத்து வைரமுத்துவை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இளையராஜாவுக்கு வைரமுத்து எழுதுவதில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. பாரதிராஜா கூட்டி வந்துள்ளாரே என்று ஒரு வாய்ப்பை கொடுத்து அவர் எழுதியது நன்றாக இல்லை என்று சொல்லி விடலாம் என்று இளையராஜா நினைத்திருக்கிறார்.

பிரபலம் வெளியிட்ட தகவல்..

இந்நிலையில் வைரமுத்து எழுதிய பொன்மாலைப் பொழுது பாடல் இளையராஜாவிற்கு பிடித்ததோடு அவரது திறமையும் புரிந்து கொண்டு வைரமுத்துவிற்கு மேலும் பல பாடல்களை எழுத வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வகையில் நிழல்கள், முதல் மரியாதை, மண்வாசனை, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சிந்து பைரவி போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்.

சில காலங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்து போக காரணம் என்ன என்று தெரியாமல் இருந்த நிலையில் அது பற்றி இருவருமே வெளிப்படையாக பேசியதில்லை.மேலும் இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க பாரதிராஜா எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த முயற்சி ஈடேராமல் போய்விட்டது.

எனினும் இளையராஜாவும் வைரமுத்துவும் இணைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்ற வேளையில் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழை விரும்பும் நேயர்களும் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

இவனை அடுத்து தற்போது ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இளையராஜா, வைரமுத்து விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version