ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக சில காட்சிகளில் நடித்த பிரபலமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் குறித்த விவகாரமான ஒரு விஷயம் சமீபத்தில் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அது என்னவென்றால் காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் இவருக்கும் திருமணமானது என்ற விஷயம் தான்.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இயக்குனர் பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் எனக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
வெப் சீரிஸ் களில் நடித்து வரக்கூடிய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அம்பிகா கணேஷ் எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று சில தனிப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
எனவே இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு அவதூறான கருத்துக்களை வெளியிட கல்வி தடை விதிக்க வேண்டும் அவர் ஏற்கனவே எங்களை பற்றி பரப்பி உள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீக்கவும் நீதிமன்றம் வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் சில கிராமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .