“அடக்கொடுமைய.. இவங்களையும் விடலயா..?..” வடிவேலு செய்த வேலை.. ராஜா ராணி Prema Priya கூறிய பரபரப்பு தகவல்..

தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழும் நடிகர் வடிவேலு மதுரையைச் சார்ந்தவர். எனவே தான் இவரை ரசிகர்கள் அனைவரும் வைகைப்புயல் வடிவேலு என்ற அடைமொழியை தந்து அன்போடு அழைத்தார்கள்.

வடிவேலு பேசும் வசனங்களில் காமெடி இருக்குமோ, என்னமோ ஆனால் அந்த வசனங்களை அவர் பேசி உடல் மொழியால் அவர் செய்கின்ற சேட்டைகளைப் பார்த்தால் நகைச்சுவை கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும்.

நடிகர் வடிவேலு..

அந்தளவு தனது நகைச்சுவையின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த வடிவேலு ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு உச்சகட்ட காமெடியனாக தனக்கு என்று ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார்.

இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டங்களிலும் இவரது மீம்ஸ் படு பேமசாக இணையங்களில் வளையம் வந்து இவரை தினம், தினம் நினைவுபடுத்தக் கூடிய வகையில் இருந்தது.

 

காமெடி கிங்காக இருந்த நடிகர் வடிவேலு பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர் வழி அதுமட்டுமல்லாமல் தன்னைவிட யாரும் உயர்ந்த இடத்திற்கு போய் விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஆசாமி.

அந்த வகையில் இவர் பல நடிகைகளை தன் வளையில் விழ வைத்து அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்ததோடு சில நடிகைகளின் வாழ்க்கையையும் தடம் மாற்றி இருக்கிறார்.

ராஜா ராணி பிரேமா பிரியா..

அந்த வகையில் தற்போது இவரோடு இணைந்து நடித்த ராஜா ராணி பிரேமா பிரியா கூறிய பரபரப்பு தகவல்களால் ரசிகர்கள் அனைவரும் அடக்கொடுமையே இவங்களையும் விடலையா.. என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

மேலும் அண்மையில் பிரேமா பிரியா கொடுத்திருந்த பேட்டியில் வடிவேலு தன் திரை வாழ்க்கையை முற்றிலும் அழித்து விட்டதாக மனம் உருகி தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

 

தமிழ் சினிமாவில் தன்னை தேடி நிறைய கதாபாத்திரங்கள் வந்தது. ஆனால் நடுவில் வடிவேலு நுழைந்ததால் அது மற்ற நடிகைகளுக்கு சென்று விட்டது. நானும் பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் என் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது வடிவேலு தான் என்ற குண்டை தூக்கி போட்டார்.

மேலும் வடிவேலுவை எதிர்த்து அவருக்கு எதிராக பேசியதற்காக என்னை ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க வைக்கவில்லை. அந்த வீடியோவை நீக்க சொன்னதோடு, மன்னிப்பு கேட்டால் தான் வாய்ப்பு என்ற ரீதியில் பேசியதை அடுத்து நான் அவர்களது பேச்சை கேட்கவில்லை.

வடிவேலு கைவரிசை..

எங்கே தன்னைவிட சினிமா துறையில் வளர்ந்து விடுவாளோ என்ற கெட்டு எண்ணத்தின் காரணமாக நல்ல பட வாய்ப்புகள் என்னை தேடி வந்த போது அதை தடுத்து தன் கைவரிசையை காட்டியவர் நடிகர் வடிவேலு.

 

மேலும் பிரேமா பிரியா வல்லவன், சிங்கம், ராஜா ராணி, மனிதன், ஹர ஹர மகா தேவகி, ஆடை, சபாபதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் வடிவேலுவின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள் இல்லாத காலத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட பிரேமா பிரியாவிற்கு நடிகர் சூரி நிதி உதவி அளித்ததாக கூறியதோடு, தன்னுடைய வளர்ச்சியை வடிவேலு தான் தடை செய்து விட்டார் என்றும் எதனால் இப்படி என்னை படங்களில் நடிக்க அவாய்ட் செய்தார் என்பது இன்று வரை தெரியவில்லை என்ற கருத்தையும் கூறி இருக்கிறார்.

இந்த பரபரப்பான குற்றச்சாட்டை ரசிகர்கள் தற்போது இணையத்தில் அதிகளவு பார்த்து வருவதோடு அனைவருக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version