ஓடும் பேருந்தில் என்னிடம் ஒருத்தன் Misbehave பண்ணும் போது.. எல்லாருமே.. ராஜலட்சுமி கண்ணீர்..!

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் விஜய் டிவியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜோடிகளான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இருவருமே மிகச் சிறந்த முறையில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து சூப்பர் டூப்பர் ஜோடியாக இன்று வரை விளங்குகிறார்கள்.

பாடகி ராஜலட்சுமி..

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தன் கணவரோடு இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கேட்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதனை அடுத்து நாட்டுப்புற பாடல்களை இவர்கள் குரலில் ரசித்து கேட்க ரசிகர்கள் விரும்பினார்கள். மேலும் ராஜலக்ஷ்மி புஷ்பா படத்தில் பாடிய சாமி பாடல் இன்று இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதை சார்ந்த நபர்களையும் கேட்கக் கூடிய விதத்தில் கவர்ந்து விட்டது.

பாடகியாக இருந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர லைசன்ஸ் என்ற படத்தின் மூலம் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் நடிகையாக மாறிவிட்டார்.

ஓடுற பஸ்ஸில்..

இந்நிலையில் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகள் குறித்தும் அவ்வப்போது ஊடகங்களில் பெருமளவு செய்திகள் வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் தற்போது ராஜலட்சுமி பகிர்ந்து இருக்கக்கூடிய செய்தியானது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இது போன்ற நிகழ்வுகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசிக்க வைத்துள்ளது.

இந்த நிகழ்வு பற்றி கண்ணீர் மல்க பேசிய ராஜலட்சுமி இரவு நேரங்களில் நடன நிகழ்ச்சி, பாட்டு நிகழ்ச்சி, கூத்து போன்றவை முடிந்த பிறகு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றால் எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செய்து செல்லும் போது யாராவது ஒருவன் என்னிடம் Misbehave செய்தால் கூட இந்த பொண்ணு இந்த நேரத்தில் எதுக்காக இவ்வளவு மேக்கப் போட்டுக்கிட்டு வந்திருக்கு என்று சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள்.

இந்தக் காலம் மிகவும் கடினமான காலமாகவும், எனது மனதை ரணப்படுத்தி கஷ்டப்படுத்திய காலமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது இணைய வசதி அனைவருக்கும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் தரம் மாறிவிட்டது.

எனவே திருத்த முடியாத சில பேர் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் பற்றி புரிதல் மக்கள் மத்தியில் எனக்கு அன்றே கிடைத்துள்ளது என்று கண்ணீர் விட்டு பேசி இருக்கிறார் பாடகி மற்றும் நடிகை ராஜலட்சுமி.

இப்போது இவர் கூறிய இந்த விஷயமானது இணையத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிலைமை எந்த பெண்ணிற்கும் ஏற்படக் கூடாது என்ற கருத்துக்களும் வலுத்து வருகிறது.

எனவே இனி வரும் காலங்களில் ஆவது பொதுமக்கள் கூடும் இடங்களில் காலதாமதமாக வரக்கூடிய பெண்ணின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டுமே ஒழிய தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தை விட்டு விட்டால் இவர்களைப் போல நல்ல பெண்களின் மனது பாதிக்காமல் இருக்கும்.

எனவே இதனை ஒவ்வொரு ஆண் மகனும் மனதில் உறுதி எடுத்து கொண்டால் நிச்சயமாக இந்த அவலம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version