நயன்தாராவை போலவே உரு மாறிய ராஜலக்ஷ்மி…!! லைசன்ஸ் படத்துக்காகவா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர்கள் இவர்கள் இந்த நிகழ்ச்சிகள் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி கலக்கிறார்கள் என்று கூறலாம். இதனை அடுத்து இவர்களுக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உண்டானது.

 மேலும் செந்தில் கணேஷ் திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த திரைப்படமானது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சினிமாவில் ராஜலட்சுமி  பாடிய சாமி சாங் மெகா ஹிட் ஆக பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.இதனை அடுத்து  சினிமாவில் பல பின்னணி பாடல்கள் பாடக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்த அமைந்தது.

அதை சீரும் சிறப்புமாக செய்து இருக்கிறார். மேலும் ரசிகர்கள் விரும்பக்கூடிய வகையில் இவரது திறன் இருப்பதால் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகி உள்ளது.

 அது மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் அன்றாட நடக்கக்கூடிய நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதைப் பின் தொடர்ந்து வருவதால் அதிலும் ஒரு குறிப்பிட்ட கணிசமான வருமானம் இவருக்கு வந்து சேர்கிறது. இதோடு போதாது என்று இவரது மாமியாருக்கும் தனியாக ஒரு youtube சேனலை ஆரம்பித்து களம் இறங்கி இருக்கிறார்.

 இதனை அடுத்து தனது மனைவியான ராஜலட்சுமி இப்போது திரைப்படத்தில் கதாநாயகியாக களம் இறக்க தயாராகிவிட்டார் என்று கூறலாம். அந்த வரிசையில் கணபதி பாலமுருகன் இயக்கம் லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார்.

 இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது மேலும் இதன் முதல் பார்வை வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்த போஸ்டரில் இவர் அறம் படத்தில் இருக்கும் நயன்தாராவை போல உள்ள கெட்ட பில் காட்டன் புடவையை கட்டி மிக நேர்த்தியான முறையில் கெத்தாக இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது முயற்சிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் இந்தப் படம் இவருக்கு வெற்றியை கொடுக்குமா? அல்லது செந்திலுக்கு அமைந்தது போல அமைந்து விடுமா என்பதை படம் வெளிவந்த பிறகு தான் அறிந்து கொள்ள முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …