நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழிக்கு ஏற்ப காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான் இயக்கிய காந்தாரா படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.
இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடத்தை இவர் செய்து காட்டி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் தமிழ், தெலுங்கு படங்களைப் போலவே சமீப காலத்தில் கன்னட மொழி படங்களும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே கேஜிஎப் படத்தை தொடர்ந்து தற்போது காந்தாராவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது ஈடு இணை இல்லாத ஒன்று என்று கூறலாம்.
இவர் இயக்கியுள்ள காந்தாரா படம் தற்போது இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த மாதமே ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்ததின் காரணமாக தற்போது தமிழ், தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை பார்த்து வியந்து போன ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே ட்விட்டரில் இந்த படத்தைப் பற்றிய கருத்துக்களை பதிவிட்டு அந்த பட குழுவை பாராட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து இவரை நேரில் சந்தித்த இதன் இயக்குனர் அவரிடம் பாராட்டுதல்களை பக்குவமாக பெற்றுக் கொண்டதோடு காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
மேலும் இவர் இவ்வாறு பாராட்டி இருப்பது அவருக்கு உற்சாகத்தை தூண்டி இருப்பதாகவும் இதுபோல் நல்ல படங்களை மீண்டும் இயக்க இது ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து தற்போது தான் நினைத்ததை செய்கிறதை சிறப்பு என்று நினைக்கின்ற இளைய தலைமுறைக்கு இவரைப் போன்ற பிரபலங்கள் செய்திருக்கும் இந்த காரியத்தை பார்த்தாவது இனி திருந்துவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.