கதையை மாற்ற சொல்லிய ரஜினி … மறுத்த இயக்குனர்! படம் தோல்வி

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் மாதவன் மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி செம ஹிட்டடித்தது.

ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் லிங்குசாமியை அழைத்து பாராட்டி இருக்கிறார். லிங்குசாமி இடம் நீங்கள் அடுத்து என்ன பண்ணப் போகிறீர்கள் என்றும் என்ன கதை என்றும் கேட்டுள்ளார். அதற்கு லிங்குசாமி தன்னுடைய கதையை கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு லிங்குசாமி இந்தப் படம் ஒரு கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் இதில் நீங்கள் நடித்தால் அது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.

அதை கேட்ட ரஜினிகாந்த் இந்தக் கதையில் ஒரு மாற்றம் செய்வோம் கல்லூரிக்கு பதிலாக ஒரு பேக்டரி என வைத்துக்கொள்வோம் . அங்கே தேர்தல் நடைபெறுவதாகும் அதில் தான் வெற்றி பெற்று அரசியலில் ஈடுபடுவதாகவும் வைத்துக்கொள்வோம் என்று கதையை சற்று மாற்றமலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இதில் லிங்குசாமிக்கு உடன்பாடில்லை . லிங்குசாமியும் அண்ணாமலை போன்ற அரசியல் இல்லாத படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். இந்தப் படம்தான் அஜித் திரிஷா இணைந்து நடித்த ஜி திரைப்படம் இந்த படம் 2005ஆம் ஆண்டு வெளியானது இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை .

இந்த நிலையில்தான் லிங்குசாமி தற்போது ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் இது பற்றி தெளிவாக கூறியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பேசாமல் நீங்கள் ரஜினிகாந்த் கூறியபடி கதையை மாற்றி இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.

கடைசியாக லிங்குசாமி 2018ஆம் ஆண்டு சண்டைக்கோழி 2 என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதேபோல் கடந்த ஆண்டு தி வாரியர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …