பொண்டாட்டி ஜாக்கெட்டில் அடிமை சாசனம் எழுதிய அட்லி.. படத்துல மட்டும் கார்பரேட் எதிர்ப்பு…! கழுவி ஊத்தும் பிரபலம்..!

அண்மையில் அம்பானி வீட்டில் நடந்து முடிந்த திருமணத்தை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் தினம் தினம் புது, புது வகையாக எழுந்து வருகிறது.

அந்த வகையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் அட்லி குறித்து கழுவி ஊற்றக்கூடிய பிரபலம் அவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பொண்டாட்டி ஜாக்கெட்டில் அடிமை சாசனம்..

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லி பற்றி அடிக்கடி சர்ச்சைகள் நிறைந்த விமர்சனங்கள் வெளி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

அது மட்டுமல்லாமல் இவரை ஒரு காபி இயக்குனர் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியதின் மூலம் பாலிவுட் திரையரங்குகளில் நல்ல பெயரை பெற்று பேமஸான நபராக மாறிவிட்டார்.

பொதுவாகவே அட்லி படத்தில் அனல் தெறிக்கும் வசனங்கள் அதுவும் கார்ப்பரேட்டுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்வது போல காட்சிகள் இருப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் மட்டும் தான் நிஜ வாழ்க்கையில் இல்லை என சொல்ல வைத்து விட்டார்.

அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் தனது பொண்டாட்டி ஜாக்கெட்டில் ஆனந்த் அம்பானியின் பெயரை எழுதி இந்த அடிமை சாசனத்தை பல மத்தியிலும் வெளிச்சம் போட்டு காட்டி தமிழக மானத்தை வாங்கிய அட்லியை கழுவி ஊத்திய பிரபலம் பற்றிய விஷயங்களை இனி பார்க்கலாம்.

அட்லி படத்தில் மட்டுமே கார்ப்பரேட் எதிர்ப்பு..

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அம்பானி அவர்களுடைய இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணமும் அதை சுற்றி நடந்த திரை துறையை சேர்ந்த நடிகர்களின் கூத்தும் பேசு பொருளாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

உச்சகட்டமாக நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தெருக்கூத்து ஆடுவது போல ஆட்டம் போட்டது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

படத்தில் உங்களைப் போன்ற பண திமிர் கொண்டவர்கள் சொன்னால் நான் அல்ல என் முடி கூட ஆடாது என்று ஏழு வசனம் பேசிய ரஜினிகாந்த் தற்போது அம்பானியின் திருமணத்தில் குத்தாட்டம் போட்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகினர்.

உங்களை பார்த்து தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் அவர்கள் சார்பாக அங்கு சென்று பணக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய திருமணத்தில் ஆட்டம் போடுவது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் குறிப்பாக உங்களுடைய ரசிகர்களின் மானத்தை அடகு வைப்பது போல உணர வைக்கிறது என ரஜினிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கழுவி ஊத்தும் பிரபலம்..

இது கூட பரவாயில்லை. ஆனால் ,பிரபல இயக்குனர் அட்லி செய்த காரியம் தான் தமிழ் சினிமா ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்று கூறலாம். இதற்கு காரணம் தன்னுடைய மனைவி பிரியாவின் ட்ரான்ஸ்ப்ரண்டான ஜாக்கெட்டில் ஆனந்தின் ஆர்மி என்று எம்ப்ராய்டரி செய்து அணிய வைத்திருந்தார் அட்லி.

தன்னுடைய படங்களில் கார்ப்பரேட்டுக்கு எதிரான கதைய அம்சங்களை கொண்டும் திரைக்கதையை கொண்டும் படங்களை இயக்கும் நடிகர் அட்லி ஒரு கார்ப்பரேட் முதலாளியின் திருமண நிகழ்ச்சியில் அவர்களுக்கு நாங்கள் அடிமை என்பது போல ஒரு வாசகத்தை அதுவும் தன்னுடைய மனைவியின் ஜாக்கெட்டில் எழுதி படம் போட்டு காட்டியதெல்லாம் பார்ப்பதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது என்று இணைய பக்கத்தில் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

அதே சமயம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்,விருப்பம் இதில் தமிழ்நாட்டின் அடையாளமோ கௌரவமோ எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அது குறிப்பிட்ட இரண்டு பேரின் கௌரவத்தை தான் பாதித்திருக்கிறது என்றும் விவாதிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அட்லியின் செயலுக்கும் ரஜினிகாந்தின் செயலுக்கும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிப்பவர்களையும் பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version