அண்மையில் அம்பானிக்கு வீட்டில் நடந்த திருமணம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த திருமண நிகழ்வில் பிரதமர் மோடியில் இருந்து பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என்று பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் தமிழகத்தில் இருந்தும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.
ரஜினி ஒரு பன்னாடை..
அந்த வகையில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
இவர் மட்டுமல்லாமல் பாலிவுட்டை தற்போது கலக்கி வரும் இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியாவோடு இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது மனைவியின் ஜாக்கெட்டில் ஆனந்த் ஆர்மி என்பதை குறிப்பிடுவது போல வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்டை போட்டு அதை பலர் மத்தியிலும் காட்டி விளம்பரங்களை தேடினார்.
இதனை அடுத்து ஷாருக் முதல் சல்மான் வரை ஆட்ட பாட்டங்களில் ஈடுபட்டு அனைவரையும் அசத்திய நேரத்தில் எழுவது வயதை கடந்த நம் சூப்பர் ஸ்டார் தன் வீட்டு விசேஷத்தில் கூட இப்படி ஆடி இருக்க மாட்டார். அந்த அளவுக்கு குத்தாட்டத்தை போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.
இதனை அடுத்து ரஜினிகாந்த் ஆடிய ஆட்டமானது தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்கள் கல்யாணத்தில் இப்படியா டான்ஸ் ஆடுவார்..
அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் அம்பானி வீடு பிள்ளை கல்யாணத்தில் ரஜினி ஆடிய ஆட்டத்தை அடுத்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
மேலும் தமிழகத்தின் மானம் காற்றில் பறக்க கூடிய வகையில் அந்த இடத்தில் சென்று இவர் எதற்கு நடனம் ஆட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதோடு அந்த கல்யாணத்தில் ஆடியவர்களை ஒரு பன்னாடை என்று சித்தரித்து இருக்கிறார்.
மேலும் தான் பேசிய பேச்சானது விவகாரமாக மாறாமல் இருக்க ரஜினியை தான் ஒரு பன்னாடை என்று சொல்லவில்லை என்றும் அந்த இடத்தில் அப்படி நடந்து கொண்டவர்களைத் தான் அந்த வார்த்தை சொல்லி பேசியதாகவும் சொல்லி இருக்கக் கூடிய இவர் நாளை ரஜினியின் பேரன்கள் வளர்ந்த பிறகு அம்பானியை விட ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெறும் போது என்ன நடக்கும் தெரியுமா? என்று கேட்டார்.
அத்தோடு அப்படி ஒரு அந்தஸ்தை அடையும் போது அம்பானி வீட்டில் சேர்ந்தவர்கள் உங்கள் தாத்தா எங்கள் வீட்டு திருமணத்தில் குத்தாட்டம் போட்டவர் என்று சொல்லக்கூடிய நிலையில் உருவாக்கி விட்டார்.
இதற்கு உதாரணமாக ஜெயலலிதா அம்மாவை நாம் சொல்லலாம். ஜெயலலிதா அம்மாவை நாம் அயன் லேடி என்று அழைத்தாலும் இன்னும் மூப்பனார் வீட்டில் டான்ஸ் ஆடிய பெண் தானே என்ற ஒரு சொல் உள்ளதை எவரும் எளிதில் மறக்க முடியாது என்ற குண்டை தூக்கி போட்டார்.
ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்று பாடலுக்கு நடனமாடிய ரஜினியின் செயல் தனக்கு ஏற்றதாக இல்லை என்று பேசி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.
விளாசும் பிரபலம்..
அது போலவே அட்லி தன் மனைவியின் ஜாக்கெட்டுக்கு பின்னால் ஆனந்த் ஆர்மி என்று குறிப்பிட்டது மிகவும் அநாகரிகமான விஷயமாக ஜெய்சங்கர் கோபம் கொப்பளிக்க பேசியது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ரஜினி ஆடிய நடனத்திற்கு காரணமே அடிமை ரத்தம் தான் இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நான் வெளிப்படையாக சொல்லுவேன்.
அப்படி இயல்பாக சந்தோஷத்தில் ஆடக்கூடிய நபர் என்றால் ஏன் இது இது போல வேறு இடங்களில் மட்டுமல்லாமல் தன் வீட்டு நிகழ்ச்சிகளில் ஆடவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.
ரஜினி ஆடிய நடனத்தில் தனி மனித கெளரவம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் கௌரவமே அடங்கி இருந்ததாக பரபரப்பாக பேசி அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்.