நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில், இவருடைய 170 ஆவது படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான ஞானவேலு இயக்குகிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ சற்று முன்பு வெளியானது. இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாள் அவருடைய ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிறந்தநாள் பரிசாக இந்த டீசர் வெளியாகி இருக்கிறது.
இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய்யை சீண்டும் விதமான வசனங்களும் பின்னணியை செய்யும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நடிகர்களும் தங்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்க நடிகர் விஜய் மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படக் கூடாதா..? ஒரு வீட்டில் அப்பா உடைய சட்டையை மகன் எடுத்து போட்டுக் கொள்வது இயல்பு.
அப்பாவுடைய சட்டை மகனுக்கு சரியாக இல்லை என்றாலும் கூட மகனுக்கு அது சந்தோஷமாக இருக்கும் என்றெல்லாம் பேசி.. எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் என்று என அழைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது போல சுற்றி வளைத்து ஒரு விஷயத்தை பேசி இருந்தார் நடிகர் விஜய்.
ஆனால், நிஜமாகவே எதை மனதில் கொண்டு பேசினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை கிண்டல் செய்யும் விதமாக இயக்குனர் ரத்தின குமார் மற்றும் நடிகர் விஜய் இருவருமே பேசி இருந்தனர்.
இயக்குனர் ரத்தினகுமார் கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என்று நடிகர் ரஜினியை கலாய்த்து இருந்தார்.
அதன் பிறகு நடிகர் விஜய் காடு என்று ஒன்று இருந்தால் அங்கே சிங்கம் புலி கரடி ஓநாய் நரி காக்கா கழுகு என இருப்பது இயல்புதான் என்று நடிகர் ரஜினிகாந்த் பேச்சை நினைவூட்டும் விதமாகவும் பகடி செய்யும் தொணியிலும் பேசி இருந்தார்.
இந்நிலையில், தலைவர் 170 படத்தின் டைட்டில் வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசக்கூடிய வசனம் இதுதான் “குறி வச்சா இறை விழனும்..” என்று கூறுகிறார்.
அப்பொழுது பின்னணியில், கழுகின் சத்தம் கேட்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.