சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ஜெய்லர். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றவர்கள் நடித்து உள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான வில்லன் யார் என்பதை தற்போது உறுதி செய்து விட்டது சன் பிக்சர்ஸ் குழுமம்.
மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படமும் நெல்சன் இயக்கிய கடைசி படமாக பீஸ்ட் படமும் சரியாக ஓடவில்லை. இந்த காரணத்தை முன்னிட்டு இந்த படத்தை முழு வீச்சில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சன் செயல்பட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் ஏற்கனவே google-லில் உள்ள புகைப்படத்தை நெல்சன் பயன்படுத்தியது தான் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே இது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் பேசக்கூடிய பொருளாக விளங்குகிறது. இந்த போஸ்டரை பார்த்து வரும் ரஜினி ரசிகர்கள் என்ன தலைவர் போஸ்டர் இப்படியா என்ற கோபத்தில் கொந்தளித்து இருக்கிறார்கள்.
எனவே அவர்களை குல் படுத்த ரஜினியின் ப்ரொபஷனல் லுக்கில் உள்ள போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் கன்னட நடிகரான சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு படத்திற்கு இவர் தான் வில்லன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது.
மேலும் ரஜினியின் போஸ்டர்க்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது. எனவே விரைவில் ரஜினி போஸ்டர் வெளிவரும் என்பதை உறுதியாக நம்பும் அவரது ரசிகர்கள் அதற்காக காத்திருக்கிறார்கள்.