அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!

பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடும்பத்தில் பெண் எடுக்கும் போது அந்த வீட்டில் மருமகனாக போகும் நபர் நிச்சயமாக அடிமையாக தான் இருந்தாக வேண்டும்.

அதுதான் காலம் காலமாக விதிக்கப்பட்ட விதியாக இருந்து வருகிறது. அப்படித்தான் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டு மருமகனாக அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக சாதாரணமாக தான் சென்று கொண்டிருந்தார் தனுஷ்.

ரஜினி வீட்டில் அடிமையாக தனுஷ்:

காரணம் தனுஷ் அப்போது பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது. அவர் வளர்ந்து வந்த காலகட்டம் அது. தனக்கு யாரேனும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா?

தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திட முடியாதா? இந்த சினிமா துறையில் ஒரு நல்ல அந்தஸ்தை பிடித்து விட முடியாதா என ஓடிக்கொண்டிருந்த சமயம் அது.

தனுசுக்கு ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்த உடனேயே அவருக்கு யோகம் அடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், மிக சுலபமாக பல்வேறு பெரிய இயக்குனர்களின் படங்களும் பெரிய தயாரிப்பாளர்களின் படங்களும் தனுஷின் கைக்கு தேடி வந்தது.

அந்த சமயத்தில் ஒரு நடிகராக தனுஷை அவர் அண்ணன் செல்வராகவன் என்றால், தனுஷிற்கு பல வழிகளில் உதவி செய்து பெரிய பட வாய்ப்புகள் கொடுத்து நட்சத்திர அந்தஸ்தில் கொண்டு போய் உட்கார வைத்தவர் அவரது மாமனாரான ரஜினிகாந்த் தான்.

வாழ்வு கொடுத்த ரஜினி:

இப்படி அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது அவர் புகழின் உச்சத்தை அடைந்தவுடன் கொஞ்சம் தன்னடக்கத்துடன் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தனுசு அப்படி இல்லை. தனக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்றால் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? என அவர் கொதித்தெழுந்தார்.

அதாவது தனுஷின் அப்பா அம்மா ரஜினி வீட்டிலே தங்கி இருந்தார்கள். அந்த சமயத்தில் ரஜினி தனது அப்பா அம்மாவை மிகவும் அடிமை போல் நடத்தியதாகவும் மரியாதை கொடுக்காததாலும் அந்த வீட்டை விட்டு

வெளியேறியதோடு மனைவி ஐஸ்வர்யாவுடன் சண்டை இட்டு தனியாக வந்தார் தனுஷ். பின்னர் போயஸ் கார்டனில் 150 கோடி ரூபாயில் மிகப்பெரிய பங்களாவை கட்டி,

தனது அம்மா அப்பாவை சொகுசு வீட்டில் வாழ வைத்த வருகிறார். இந்த விவகாரம் எப்படி இருக்க இவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது .

பெற்றோர்களை அவமானப்படுத்திய ரஜினி :

இவர்கள் மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு முறையாக குடும்பநல நீதிமன்றத்தை நாடினார்கள்.

தனுஷின் இந்த விவாகரத்து வழக்கை கையில் எடுத்த நீதிபதிகள் கிட்டத்தட்ட 6 மாதம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமா? இல்லை பிரிய வேண்டுமா? அல்லது அவர்களுக்காக வாழ வேண்டுமா என்பதை அவர்கள் முடிவெடுத்து பின்னர் சொல்ல வேண்டும்,

பேரன் பதிலை கேட்டு ஆடிப்போன ரஜினி:

என நீதிமன்றம் அவர்களுக்கு கூறியிருக்கிறது. இப்படிப்பட்ட சமயத்தில் ரஜினிகாந்த் தனது பேரன்களை அழைத்து…

உங்களுக்கு அம்மா வேணுமா? அல்லது அப்பா வேணுமா? என்று ரஜினிகாந்த் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் மகன் யாத்ரா சொன்ன பதில் ரஜினியை நிலைகுலைய செய்துள்ளது.

யாத்ரா கூறிய பதில் என்னவென்றால்.. உங்களிடம் இந்த கேள்வியை கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்.

என் அப்பா தனுஷிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என் அம்மா ஐஸ்வர்யாவிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

அவர்களிடம் அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? என கேள்வி கேளுங்கள் அவர்கள் சொல்லும் பதிலை நான் சொல்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam