சூப்பர் ஸ்டாரையே புடிச்சு தெருக்கூத்து ஆட விட்டிருக்காங்க… Money is Always Ultimate..! நெட்டிசன்கள் ஷாக்..!

தென்னிந்திய நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு, வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு சிகரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.

அப்படிப்பட்ட ரஜினிகாந்தே இறங்கி நடனமாடியிருக்கும் வீடியோதான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த்தை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பிறகு அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பிய பிறகு அதிகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார்.

பிறகு வெகு காலங்கள் கழித்துதான் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகமாக தோன்ற துவங்கினார் ரஜினிகாந்த். பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது ரஜினிகாந்த் மிகவும் சிம்பிளாகதான் இருப்பார். சாதாரணமாக பேசுவார்.

சிம்பிளான நபர்:

அவ்வளவுதான் மற்றபடி ரஜினிகாந்திடமிருந்து பெரிதாக வேறு ஒன்றும் எதிர்பார்த்து விட முடியாது என்கிற நிலை இருக்கும். ஆனால் சமீபத்தில் இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அம்பானி குடும்பத்தில் திருமண விழா நடந்தது.

அந்த திருமண விழாவிற்கு பல பிரபலங்கள் வந்திருந்தனர். இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் நடப்பதாக கூறப்படுகிறது. வட இந்திய முறையில் நடப்பதால் ஒவ்வொரு விழாவாக நடந்து வருகிறது இறுதியில்தான் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவிற்கு இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய பிரபலங்களில் ரஜினியும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே அவரும் ஒவ்வொரு விழாவிற்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களுக்கே அதிர்ச்சி:

இந்த நிலையில் சமீபத்தில் அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அங்கு ஏதோ மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்கள் இறங்கி குத்தாட்டம் போடுவது போல இறங்கி ஆடி இருக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் இதுவரை எவ்வளவோ மேடை நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இருக்கிறார். அவரது திரைப்பட வெளியீட்டு விழாக்களில் கூட அவர் நடனமாடி யாரும் பார்த்திட முடியாது. அப்படிப்பட்ட ரஜினிகாந்த் அம்பானியின் மகன் திருமண விழாவில் நடனம் ஆடி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்கடா இது சூப்பர் ஸ்டாரை பிடித்து தெருக்கூத்து ஆடவிட்டு இருக்கீங்க Money is always ultimate என கூறுவது உண்மைதான் போல என்று கூறி இது குறித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த வீடியோதான் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version