சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படம் பார்ப்பார்கள். அவரது ஸ்டைலுக்கு என்றே ஒரு மாசான ரசிகர் கூட்டம் இன்று வரை உள்ளது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிக வசூலை வாரி குவித்த பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த மாஸ் வசூலை முறியடிக்க கூடிய வகையில் தான் படம் தர வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பி இருக்கிறார்.
ஜெய்லர் படத்தில் மிக தீவிரமாக நடித்து வரக்கூடிய இவர் வசூலை வாரி குவிக்க வேண்டிய படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டதின் காரணத்தினால் பல இயக்குனர்கள் இவரிடம் கதைகளை கூறி வருகிறார்கள்.
அதில் தற்போது இரண்டு கதைகளை தேர்வு செய்து இருக்கக்கூடிய இவர் இந்த படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்பது தற்போது திட்டவட்டமாகி உள்ளது.
மாசான கதை அம்சம் கொண்ட இந்த இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது. இதை அடுத்து இந்த இரண்டு படங்களுக்கு அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருக்கிறார்.
அந்த சம்பளத்தை தர லைக்கா நிறுவனமும் சம்மதித்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்த பின் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பளமாக கொடுக்க முன்வந்துள்ள லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கி மேலும் பன்மடங்கு லாபம் பார்க்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இதையடுத்து இந்த படத்தின் பெயர் மற்றும் கதைக்களம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் ரஜினிகாந்தின் இந்த படம் அவரது நண்பரான கமலஹாசனின் படத்தை விட அதிக அளவு வசூலை வாரிக் குவிக்க இவர்கள் பக்க பலமாக இருப்பார்கள் என தெரிகிறது. இதை அடுத்து திரை உலகில் பொறாமை இல்லை, போட்டி தான் உள்ளது என்பதை இவர் நிரூபித்து விட்டார்.