நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே லதா ரஜினிகாந்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்றுதான் தமிழக மக்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன், ரஜினியும் லதாவை விவாகரத்து செய்ய முன்வந்தவர்தான் என்ற அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியே வந்திருக்கிறது.
ஆனால் அந்த விஷயத்திலும் கூட கமல்ஹாசன்தான் அவருக்கு தடையாக இருந்து, காப்பாற்றி இருக்கிறார் என்ற உண்மையும் இப்போது தெரிய வந்திருக்கிறது.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் சில போதை பழக்கங்களுக்கு அதீத அடிமையாக இருந்திருக்கிறார். குறிப்பாக, பாக்கு வகைகளை சுவைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இதன் காரணமாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அடிக்கடி மனத்தாங்கல் பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது.
விவாகரத்து
இதனால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போன நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்காக முடிவு செய்து விவாகரத்துக்கான நோட்டீசையும் அனுப்பி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. அட இவரா இப்படி..? ரசிகர்கள் ஷாக்..
கே பாலச்சந்தர்
ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்தை அழைத்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள், ரஜினிகாந்துக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்து முடிவில் இருந்து பின் வாங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் நடிகர் கமலஹாசனும் தன்னுடைய மனைவியை பிரிந்திருந்தார்.
கமல்ஹாசன் மார்க்கெட்
தன்னுடைய மனைவியை பிரியும் வரை கமலஹாசனின் மார்க்கெட் ரஜினிக்கு இணையாக இருந்தது. தன்னுடைய முதல் மனைவியை எப்போது கமல்ஹாசன் பிரிந்தாரோ அப்போதே அவருடைய மார்க்கெட் வீழ்ந்து விட்டது.
அதன் பிறகு அவருடைய மார்க்கெட் எழவே இல்லை. அவருக்கு உள்ள ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென குறைந்தது. பெண் ரசிகைகள் இல்லாமலே போனார்கள்.
இதையும் படியுங்கள்: நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..?
நம்பர் ஒன் ஸ்டாராக…
ஆனால் தற்பொழுது நீதான் சினிமாவின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறாய். சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறாய். இந்த நேரத்தில், உன் மனைவியை நீ விவாகரத்து செய்தால், உன்னுடைய இடத்தை பிடிப்பதற்கு வரிசையில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் உனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறதே, அவர்களுடைய நிலைமையை நீ யோசித்துப் பார்க்க வேண்டும்.
பின்வாங்கிய ரஜினி
கமலஹாசனின் இரண்டு பெண் குழந்தைகள் என்ன ஆகப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதே நிலைமை உன்னுடைய பெண் குழந்தைகளுக்கும் வேண்டுமா என்று ரஜினிகாந்திடம் கேட்டிருக்கிறார்.
உடனே தன்னுடைய விவாகரத்து முடிவை பின்வாங்கி தன் மனைவிக்கு கொடுத்த விவாகரத்து நோட்டீசை வாபஸ் பெற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
வேண்டுமா, வேண்டாமா
மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ரஜினிக்கு, இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை, நம்பர் ஒன் இடம் வேண்டுமா, வேண்டாமா, என்பதுதான். அதில் மிரண்டு போய்தான் வாபஸ் பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் அட, சூப்பர் ஸ்டாரா இப்படி நடந்துக்கிட்டார் என ஷாக் ஆகி இருக்கின்றனர்.