சற்று முன் : லால் சலாம் பட ரிலீஸிற்க்கு தடை..! இப்படியொரு காரணமா..?

நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரகட் செய்திருக்கிறார்.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம், லால் சலாம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துளளார்.

கடந்த டிசம்பர் மாதமே இந்த படம் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால், பொங்கலுக்கு தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை.

இப்படி இரண்டு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், வரும் 9ம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

லால் சலாம்…

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் இரட்டை ஹீரோக்களாக நடித்துள்ளனர். இதில் தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் 45 நிமிடங்கள் வரும் ரஜினிகாந்த், 22 காட்சிகளில் இடம்பெற்றுள்ளார்.

இதில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில், சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளது. ரஜினியுடன் இருக்கும் ஒரு கேரக்டராக தம்பி ராமையாவும் நடித்துள்ளார்.

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். கழுகு கதை சொன்னது அவரை குறிப்பிட்டு அல்ல.

அவரை நான் போட்டியாக கருதுவது எனக்கு மரியாதை அல்ல, கவுரவமும் அல்ல. விஜய்க்கும் அதே போல்தான் எனவும் விளக்கமளித்தார்.

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, எங்க அப்பா ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கி என்றால், அவர் மொய்தீன் பாய் கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார் என ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தடை..

தமிழகத்தில் லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிற நிலையில், குவைத் நாட்டில் லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை இந்த கதை மையமாக கொண்டிருப்பதாலும் அதில் இந்து- முஸ்லிம் மதம் சார்ந்த பிரச்னைகளும் பிரதானமாக இருக்கலாம் எனக் கருதி, குவைத் நாட்டில் லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குவைத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam