பக்கத்து வீட்டுக்காரருடன் ரஜினி இப்படித்தான் பழகுவார்..! பிரபலம் சொன்ன சீக்ரெட்..!

நடிகர் ரஜினிகாந்த் குறித்த மிகப்பெரிய பிரமாண்ட பிம்பம், பலரது மனங்களில் இருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் அவர் இந்திய அளவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு மனிதராக இருக்கிறார்.

அதனால்தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர். ஆனால் கடைசியில் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

ஆனால் ரஜினிகாந்த், ஆண்டவன் சொன்னால் வருகிறேன் என்றார். கடைசி வரை ஆண்டவனும் சொல்லவில்லை . அவரும் அரசியலுக்கு வரவில்லை.

ஆனால், 73 வயதிலும் கதாநாயகனாக நடிக்க ஆண்டவன் சொன்னதாக அவர் எந்த இடத்திலும் இதுவரை குறிப்பிட்டுச் சொன்னது இல்லை.

ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்.

ஜெயிலர் படத்தை அடுத்து தசெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி தனது 171 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். ஸ்கிரிப்ட் ரைட்டப்பில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருந்து வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் 172வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதில் ரஜினி சம்பளம் ரூ. 210 கோடி என இப்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேமியோ ரோலில் ரஜினிகாந்த்

நாளை ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் ரிலீசாகிறது. இதில் ரஜினி 45 நிமிடங்கள், 22 காட்சிகளில் வருகிறார். அதனால் ரசிகர்களுக்கு ரஜினி படம் பார்த்த திருப்தி நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியதாவது, போயஸ்கார்டனில் ஜெயலலிதா இருந்த போதே, அந்தப் பகுதியில் வசித்தவர்கள் சாதாரணமாக வெளியே நடமாட முடியாத நிலைதான் இருந்தது.

இப்போது ரஜினி ரசிகர்களால், அவர் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களும் அதே சிரமத்தை, கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

பக்கத்து வீட்டு பெண்மணி

கடைசியாக ஒரு பெண்மணி வந்து, திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தில் சத்தம் போட்டுவிட்டு சென்றாரே, அதில் இருந்தே ரஜினி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எப்படி பழகுகிறார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அவர் நல்ல முறையில் பழகி இருந்தால், அவர் ஏன் மீடியா முன் வந்து நின்று அப்படி பேசப் போகிறார். நேரடியாக ரஜினி வீட்டுக்கு தனியாக சென்று விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொல்லியிருப்பாரே.

நடிகர்கள் எல்லாம் திரையில்தான் நல்ல விதமாக நடந்துக்கொள்வார்கள். நிஜத்தில் அப்படி இல்லை என்பதற்கு இதுதான் உதாரணம் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் பழக்கவழக்கம் எல்லாம் இந்த லெவலில்தான் இருக்கும் என்பதை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் இந்த நேர்காணலில் தெளிவுபடுத்தி விட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam