ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

தற்சமயம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிக கஷ்டப்பட்டு தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் முதன் முதலில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பே விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்த காரணத்தினால் அவருக்கு எளிதாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தன.

சிவகார்த்திகேயன்

தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் மாதிரியான திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த பொழுது காமெடி நடிகராகதான் தனது பயணத்தை துவங்கினார்.

ஏனெனில் எடுத்த உடனே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக தனது திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை வைக்க துவங்கினார் சிவகார்த்திகேயன்.

அப்படியாக முழுதாக ஆக்ஷன் ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் காக்கி சட்டை. அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் காமெடி திரைப்படங்களாகவே நடித்து வந்தார். சில காலங்களுக்குப் பிறகு தற்சமயம் மீண்டும் அமரன் என்கிற திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

படையப்பா 2 படத்தில்

இது முழுக்க முழுக்க ஒரு சீரியஸான கதாபாத்திரம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகின்றன இந்த நிலையில் சிவகார்த்திகேயன்தான் அடுத்த விஜய் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஏனெனில் விஜய் வெகு சீக்கிரத்தில் சினிமாவை விட்டு செல்ல இருக்கிறார் அதற்கு பிறகு அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் சிவகார்த்திகேயனைவிட மூத்த நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கும்பொழுது சிவகார்த்திகேயன் எப்படி அந்த இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் ஒரு காட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது. இது அதிக சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் ரஜினி நடித்த படையப்பா திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக ஒரு பேச்சு இருந்து வந்தது.

இது பலருக்குமே அதிர்ச்சியையும் கொடுத்து வந்தது. இந்த நிலையில் இது குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் ஒரு நேர்காணலில் கேட்ட பொழுது சாத்தியமென்றால் எதுவும் தமிழ் சினிமாவில் நடக்கும். வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம் என்று பொதுவாக கூறிவிட்டார் கே.எஸ் ரவிக்குமார் அவர் கூறுவதை வைத்து பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனும் கே.எஸ் ரவிக்குமாரும் இணைந்து படையப்பா 2 செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version