தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் அர்ஜுன். நல்ல கட்டு மஸ்தான தோற்றத்தில் இளமை தோற்றம் குறையாமல் அதே ஹேண்ட்ஸம் மேனாக எப்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகர் அர்ஜுன்:
அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்ததால் நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆக்சன் கிங் என்ற பட்ட பெயரால் பரவலாக அழைக்கப்பட்டார்.
இவர் கராத்தே சண்டைகளில் மிகவும் கைதேர்ந்தவராக அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி நடிப்பார்.
இவரது நடிப்பில் வெளிவந்த முதல்வன், ஜென்டில்மேன், ரிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்டது .
முதல்வன் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுனனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அர்ஜுனின் திரைப்படங்கள்:
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகையாக ஆயுத பூஜை, அண்ணனுக்கு ஜே, அண்ணன் என்னடா தம்பி என்னடா, மேட்டுப்பட்டி மிராசு, துருவ நட்சத்திரம் ,எங்கள் குரல், என் தங்கை, சொந்தக்காரன் ,முதல் குரல். உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அர்ஜுன் இவர் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளா ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார்.
தம்பி ராமைய்யா மகனுடன் காதல்:
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தந்தை அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குணசித்திர நடிகரான தம்பி ராமையாவை மன்மகன் உமாபதி ராமையாவுடன் நட்பாக பழகினார்.
பின்னர் நெருக்கமாக பழகி பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 10ம் தேதி ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ராமையாவுக்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது .
முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் அவர்களுக்கு நடந்தது. இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்படங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள் .
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார் .
அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை வாழ்த்திய ரஜினி அவர்களுக்காக தான் கொண்டு வந்த கிஃப்டை அவர்களிடம் நீட்டி இருக்கிறார்.
அவமானப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த்:
ஆனால் அங்கிருந்து யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை. மணமகன், மணமகளும் வாங்கவில்லை மேலும் அர்ஜுனோ அல்லது தம்பி ராமையாவோ ரஜினியின் கிப்ட் வாங்காததால் ரஜினியை அந்த கிப்ட் ஒரு ஓரமாக குனிந்து வைக்கிறார் .
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியதை அடுத்து ரசிகர்கள் எல்லோரும் அர்ஜுன் திருமணத்தில் ரஜினிகாந்த் அசிங்கப்படுத்தப்பட்டார்… அவமானப்படுத்தப்பட்டார்… தலைவரை கூப்பிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்து வந்தார்கள்.
ஆனால், சில பேர் இது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதை தயவு செய்து பெரிதுபடுத்தி பேச வேண்டாம் என சிலர் கருத்துக்களை கூறி வந்தார்கள் .
இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கண்டுகொள்ளாத அளவுக்கு அவர்கள் திருமணத்தில் அவ்வளவு பிஸியாக இருந்திருக்க வாய்ப்பில்லை இது வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டது தான் என கூறி வருகிறார்கள். மேலும் இது ரஜினிகாந்த் ரசிகர்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.