சிம்ரன், திரிஷா, நயன்தாரா போன்றவர்களை தொடர்ந்து தற்போது சிங்கிள் பசங்க மத்தியில் ஃபேவரைட் ஹீரோயினி யார் தெரியுமா? அது வேறு யாருமில்லை தற்போது வரை மலையாளத்தில் பட்டையை கிளப்பி கர்ணன் திரைப்படத்தில் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான ரஜிஷா விஜயன் தான். இவர் கர்ணன் படத்தில் அழகான ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுசுடன் ஜோடி போட்டு கலக்கி ரசிகர்களின் இதயத்தை காலி செய்து விட்டார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்த போதுதான் கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்ததும் கதையை கேட்டேன். கதை பிடித்ததின் காரணமாக அந்த படத்தில் நடித்தேன் என்று கூறி இருக்கிறார் இந்த படத்தில் நடிப்பதற்காக இவர் செமத்தியாகா ஹோம் ஒர்க் செய்திருக்கிறார்.
இதில் அந்த குறிப்பிட்ட கிராமத்திற்கு சென்று அங்கேயே 10 நாட்கள் தங்கி இருந்து அந்த மக்களின் பழக்க வழக்கங்களை நன்கு தெரிந்து கொண்ட பின்பு தான் இவர் அந்த ஊர் பெண்ணாக நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட அந்தப் பெண்ணாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார் என்ற வார்த்தை தான் சிறப்பாக இருக்கும்.
இவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது மிக சிறந்த புகைப்படங்களை வெளியிடுவார். அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே இவரது ரசிகர்கள் பட்டாளமே கூடி குழுமி இருக்கும்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து பிரம்மன் படைத்த பிரம்மாண்ட காவியம் இவர் தான் என்று சகட்டுமேனிக்கு இவருக்கு ஐஸ் வைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் சிவப்பு நிற புடவையை உடுத்தி ஸ்லீவுலெஸ் ஜாக்கெட்டில் பின் முதுகை அப்படியே காட்டியிருக்கிறார். இந்த பரந்த பகுதிக்கு எதை பட்டா போட்டு கொடுக்கலாம் என்று தற்போது ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
மேலும் பழங்காலத்து குளக்கரை போல இது உள்ளது படிகளின் கீழ் பக்காவாக நின்று ஒரு பாதத்தை தூக்கிப் பார்த்து இருக்கும்போஸில் பல நூறு கதைகள் பேசலாம் என்று இளசுகள் கூறிக் கொள்கிறது.