ரஜிஷா விஜயன் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் ரஜிஷா விஜயன் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து கேரள அரசின் மாநில திரைப்பட விருதை வென்றார்.

ரஜிஷா விஜயன்..

இவர் நடிப்பில் வெளி வந்த ஒரு சினிமாக்காரன் என்ற திரைப்படம் 2017-ஆம் ஆண்டு வெளி வந்தது. இதனை அடுத்து 2019-இல் ஜூன் மற்றும் பைனல்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனையடுத்து இவர் ஜெய்பீம், சர்தார் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

சமூக வலைதள பக்கங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் த ஃபால்ஸ் ஐ, கோ கோ, லவ்லி ஃபுல் யுவர்ஸ் வேதா ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த டோபின் தாமஸ் என்பவரோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

டும் டும்மா..

இந்நிலையில் இவர் 1461 நாட்களுடன் நாங்கள் சூரியனை சுற்றி இன்னும் சுற்றி வருகிறோம். இந்த இடத்தில் அதிக அளவு அன்பும், சிரிப்பும் அவரின் திறன்களை காட்டுகிறது என பதிவிட்டு இருக்கிறார்.

அத்தோடு இல்லாமல் ரஷிஷா இந்த பதிவில் முடிவில்லா காதலை நோக்கி என கமெண்ட் செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இந்த பதிவினை பார்த்து ரசிகர்கள் கொசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்குள் காதல் பூத்திருப்பதை சிம்பாலிக்காக இவர் சொல்லி விடாமல் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் என அவர்கள் நண்பர்களோடு இணைந்து பேசி வருகிறார்கள்

மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?..

மேலும் இவர் இப்படி பதிவு செய்வதின் மூலம் ரெஜிஷா  டோபின் தாமஸும் காதலிப்பது உறுதியாக வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

எனவே விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகின்ற விஷயம் தான் தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் திரை துறையினர் மட்டுமல்லாமல் அவரின் நலம் விரும்பிகளும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழ வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இவர்களது காதலுக்கு வாழ்த்து சொல்லுவதோடு மட்டுமல்லாமல் விரைவில் நடக்கும் டும்டும்க்கும் அட்வான்ஸ் ஆக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version