இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கிராமத்து தேவதையாக நடித்திருக்கும் நடிகை ரஜிஷா விஜயன்.
தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சர்தார் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதும் கொடுக்கப்பட்டது.
கர்ணன் படத்தில் அழகாக ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக நடித்து வந்த நடிகை ரஜிஷா விஜயன் தனுசுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய நடிகை ரஜிஷா விஜயன் பைனான்ஸ் என்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. இன்னும் சொல்லப்போனால் இப்படியான கதையில் நடிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. எனவே இந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.