பயங்கரமா குடிப்பாரு.. இரவில் அதை கேட்டு டார்ச்சர் பண்ணுவார்.. ஓப்பனாக கூறிய ராஜ்கிரண் வளர்ப்பு மகள்..!

நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா தன்னுடைய கணவரை சமீபத்தில் பிரிந்தார். இவர்களுடைய திருமணமே பல அமர்க்களங்களுக்கு நடுவே தான் நடந்தது.

இவருடைய திருமணத்தின் போது அவனை திருமணம் செய்து கொள்ளாதே என்று ராஜ்கிரன் கடுமையாக எச்சரித்தார். ஆனால், தன்னுடைய தந்தையின் பேச்சை கேட்காமல் காதல் தான் முக்கியம் என்று நடிகர் முனீஸ் ராஜாவை கரம் பிடித்தார் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா.

சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என ராஜ்கிரண் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் ஜீனத் பிரியா வெளியிட்ட வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.

அதில் அவர் கூறியிருந்ததாவது, நான் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன். தற்பொழுது இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என பரபரப்பை கிளப்பியது மட்டுமில்லாமல், என்னை மன்னிச்சிடுங்க டாடி.. நான் உங்கள் பேச்சை கேட்காதது மிகப் பெரிய தவறு என ராஜ்கிரனிடம் பகிரங்கமாக மன்னிப்பை கேட்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார் ஜீனத் பிரியா. இவர் பேசிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

அவர் கூறியதாவது திருமணமான முதல் மாதத்தில் இருந்து எனக்கும் அவருக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. முனீஸ் ராஜா பயங்கரமாக மது அருந்துவார். மது அருந்திவிட்டு என்னை அடிப்பார்.. கண்டபடி பேசுவார்.. ஆனால்.. காலையில் எழுந்ததும் இரவு என்ன நடந்தது என்று தெரியாதது போல தெளிவாகவே இருப்பார். இயல்பாக இருப்பார்.

இவருடைய இந்த குடிப்பழக்கத்தை மாற்றி விடலாம் என்று நான் நம்பினேன். ஆனால், முடியவில்லை. மேலும் என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரிடம் சென்று பணம் கேட்பது என்று தெரியாமல் என்னுடைய தோழிகள் சிலரிடம் பண உதவி பெற்று என் கணவருக்கு கொடுத்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது.

அவற்றை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். மேலும் குடித்துவிட்டு வந்து இரவு நேரங்களில் எனக்கு பணம் வேண்டும் எனக்கு காசு வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். நீ வீட்டை விட்டுப் போய்விட்டால் உன் குடும்பத்தையே வெட்டுவேன் என பலமுறை மிரட்டியிருக்கிறார்.

இப்படி இவருடைய மோசமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்றேன் மருத்துவமனையை சென்று மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அப்பா எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்தவர் தன்னுடைய அப்பாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பேசி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam