தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை மீனா முக்கியமானவர். குழந்தை நட்சத்திரமாகவே 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீனா.
தமிழில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம் என கூறலாம். அதேபோல மிக சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார் மீனா.
குழந்தையாக மீனா:
1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த மீனா அடுத்த ஆறு வருடங்களில் 1991 ஆம் ஆண்டு என்று ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதுவும் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை ராஜ்கிரணை பார்த்து மீனா பயந்து கொண்டே இருந்ததாக ஒரு பேட்டியில் கூறி இருப்பார் ராஜ்கிரண். அந்த அளவிற்கு சிறு வயதிலேயே அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் மீனா.
நடிகையாக வாய்ப்பு:
மீனா தனிப்பட்ட நடிப்புத் திறன் கொண்டவர் என்று கூறலாம். அதனால்தான் தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதுவும் 15 வயதிலேயே மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பது சாதாரண விஷயம் கிடையாது.
இந்த நிலையில் அவர் அறிமுகமான அனுபவம் குறித்து ராஜ்கிரண் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை படமாக்கும் பொழுது ஒரு பத்திரிக்கையில்தான் நான் மீனாவின் போட்டோவை பார்த்தேன்.
முதல் பட அனுபவம்:
அதன் பின்பு படத்தின் இயக்குனரான கஸ்தூரி ராஜாவிடம் சென்று இந்த பொண்ணுதான் படத்திற்கு ஹீரோயினாக இருக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அந்த மீனாவை பார்த்த கஸ்தூரி ராஜா இந்த பெண் மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறார்கள்.
இந்த படத்தில் வரும் சோலையம்மா கதாபாத்திரம் கொஞ்சம் வயதுள்ள கதாபாத்திரம் எனக் கூறலாம். கற்பவதியாக இருக்கக்கூடிய கதாபாத்திரம் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்த போகும் கதாபாத்திரம் என்பதால் மீனா அதற்கு சரியாக இருப்பாரா? என்று யோசித்தார் கஸ்தூரிராஜா.
ஆனால் ராஜ்கிரண் விடாப்படியாக இருந்ததால் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாவை நடிக்க வைத்தார். ஆனால் படம் வெளியான பிறகு சோலையம்மாவின் கதாபாத்திரம்தான் நின்று பேசும் கதாபாத்திரமாக அமைந்தது அந்த அளவிற்கு மீனா மெனக்கெட்டு அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.