“காரிலேயே பேண்ட்-ஐ கழட்டி.. அதை சேஞ்ச் பண்ணுவேன்..” – போட்டு உடைத்த ரகுல் பிரீத் சிங்.!

நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய மனக்குமுறல்களை சமீபத்திய ஒரு பேட்டியில் போட்டு உடைத்து இருக்கிறார். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என நடிகை ராகுல் ப்ரீத் சிங் உருக்கமாக பேசியுள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராகுல் பிரீத் சிங் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் தான் கடந்து வந்த பாதையை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதில் இவர் கூறிய சில விஷயங்கள் உள்ளபடியே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கின்றன.

அவர் கூறியதாவது, என்னுடைய குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. நான் இதை சொல்லும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் சினிமாவில் உள்ளே வருவதற்காக எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பேன் என்று இதற்குமேல் ஒன்னும் சொல்லத் தேவையில்லை.

எந்த ஒரு திரையுலக பின்னணியும் இல்லாமல் சினிமாவில் உள்ளே நுழைந்து ஜெயிப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் என்பது சினிமா துறையினர் மட்டுமில்லாமல் சினிமாவை பார்க்கும் ரசிகர்களுக்கு கூட தெரியும்.

அந்த அளவுக்கு சினிமா துறையில் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் சினிமா இருக்கிறது. நான் சினிமாவுக்கு நடிக்க வரும் முன்பு மும்பையில் எங்கெங்கே படப்பிடிப்புக்கான ஆடிஷன் நடக்கிறது எங்கு நடிகைகளின் தேர்வு நடக்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்வேன்.

என்னுடைய பையில் எப்போதும் உடைகளை நான் வைத்திருப்பேன். அதனை வைத்துக்கொண்டு காரிலேயே என்னுடைய உடைகளை நான் மாற்றிக் கொள்வேன். காருக்குள் பேண்ட்-தை மாற்றுவது இன்னும் கடினமாக இருக்கும். ஆனாலும், காருக்குள்ளேயே பேண்ட்-ஐ கழட்டி மாற்றுவேன். ஏனென்றால் தனியாக ஒரு ரூம் எடுத்து தங்கினால் அதற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

அந்த வசதி என்னிடம் இல்லை. எனவே காரிலேயே என்னுடைய உடைகளை மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். சில படங்களில் என்னை நடிக்க நடிகையாக நடிக்க வைக்கிறேன் என்று ஒப்புதல் கொடுப்பார்கள்.

ஆனால், திடீரென வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டு உங்களை படத்திலிருந்து நீக்கிவிட்டோம் என்று கூறுவார்கள். அப்பொழுது உலகமே இருண்டு விட்டது போன்ற ஒரு எண்ணம் எனக்குள் தோன்றும்.

ஆனால் இதையெல்லாம் ஒரு போராட்டமாகவே நான் நினைக்கவில்லை. ஏனென்றால் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது திரைத்துறையினரின் பின்புலம் எனக்கு எதுவும் கிடையாது எனவே போராடித்தான் நான் இந்த வாய்ப்புகளை பெற்றேன் என்று வெளிப்படையாக தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam