இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளின் வரிசையில் சிறந்த நடிகையாக திகழ்பவர் ரகுல் ப்ரீத் சிங். 32 வயதாகும் இவர் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் .இவர் தனது பிறந்தநாளை தனது காதலருடன் லண்டனில் மிகவும் குஜாலான முறையில் கொண்டாடி இருக்கிறார்.
தமிழில் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் ரகுல் பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதோடு ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்க கூடிய படமாக இது அமைந்துள்ளது.
இது தவிர இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரக்கூடிய இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இணையாக நடித்திருக்கிறார் .இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெளிப்பாட்டை தூண்டியிருக்கிறது.
இவர் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பாலிவுட் நடிகரான ஜக்கி பக்னானி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். நடிகர் மட்டுமல்ல சிறந்த தயாரிப்பாளரும் கூட பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தமிழில் த்ரிஷாவுடன் இணைந்து மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது பிறந்தநாளை காதலனோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் மேலும் இந்த நிகழ்வில் அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இதனையடுத்து இவர் கொண்டாடிய பிறந்த நாள் நிகழ்வை தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ பாட்டு ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
விரைவில் பதில் அளிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் இந்த ஜோடிகள் பல்லாண்டு வாழ ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த போட்டோவுக்கு லைக்கை வாரி வழங்கியிருக்கிறார்கள்.