மர்ம உறுப்பில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. கையும் களவுமாக சிக்கிய இந்தியன் 2 நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர்..!

உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்களை அடிமைகளாக மாற்றி வரும் போதைப் பொருள் பயன்பாடு ஆனது தற்போது சர்வதேச அளவில் அதிகரித்து வருவதோடு காவல் துறை அதிகாரிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் கடத்தல் விஷயங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருந்த சாதிக் முதற்கொண்டு பல முக்கிய பிரமுகர்கள் இது போன்ற வழக்குகளில் மாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி வருகின்ற வேளையில் மீண்டும் நடந்த நிகழ்வானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம உறுப்பில் மறைத்து வைக்கப்பட்ட போதை பொருள்..

இந்நிலையில் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் தற்போது பிரபல தென்னிந்திய அளவில் பல படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் மாட்டியிருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் பிரீத் சிங்கை பொருத்த வரை தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் அண்மையில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலை செய்திருந்தார். இதனை அடுத்து இவரது ரோல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இவரது சகோதரர் மீது போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கும் விஷயம் இணையங்களில் படு வேகமாக பரவி வருகிறது.

கையும் களவுமாக சிக்கிய ரகுல் ப்ரீத் சிங் சகோதரர்..

அத்தோடு ஷாருக்கானின் மகனும் இது போன்ற விவகாரத்தில் மாட்டிக் கொண்டு சிறை சென்ற விவகாரங்கள் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி அந்த சூடு அடங்கி முடிவதற்குள் மீண்டும் மும்பையைச் சேர்ந்த ரகுல் பிரீத் சிங் சகோதரர் செய்த வேலை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மேலும் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதில் நான்கு நைஜீரியர்களிடமிருந்து போதைப்பொருள் வாங்கிய போது அவன் பிரீத் சிங் சகோ கையும் களவுமாக பிடி பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கொக்கைன் போதை பொருளை அவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி அதை அடுத்து பெரும் அதிர்ச்சி திரையுலகை மட்டுமல்லாமல் வெகு ஜன மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இதனை அடுத்து ரகுல் பிரீத் சிங்கின் ரசிகர் வட்டாரம் கடுமையான அதிர்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை விவரம் தெரியாத நண்பர்களிடம் சொல்லி இந்த விஷயத்தை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் இது போன்ற போதை பொருட்களின் நடமாட்டம் ஆனது தற்போது பிரபலமாக இருக்கக் கூடிய நபர்களின் மூலம் நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதை நம்புவது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் பெருக வேண்டும். இது தொடர்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களின் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் அனைவரும் முன்வைத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version