தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவருக்கு தமிழில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்கு சென்ற அவருக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பல தெலுங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழில் மீண்டும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் அதிரிபுதிரி வெற்றி பெற்றது.
பொதுவாக இவருடைய கண்பார்வை ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி. இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு உண்டான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மறுபக்கம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இவர் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.