இந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் :
திரைப்படத்துறையில் நடிகை ஆவதற்கு முன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாடல் அழகாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்கள் மற்றும் பிரபலமான பிராண்ட்டிற்கு விளம்பரம் செய்து வந்தார்.
ஃபேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டதன் மூலமாக திரைப்பட வாய்ப்பையும் பெற்றார்.
தமிழில் தடை. அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலமாக நடித்த கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ,ஸ்பைடர், தேவ், என் ஜி கே, அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் நடித்திருக்கிறார் .
தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார் . இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அண்மையில் தான் இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
கவர்ச்சியில் தாராளம்:
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டிருக்கிறார்.
எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத வகையில் தாராளமான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் Chhatriwali என்ற படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என்ற காரணத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, இந்த திரைப்படத்தில் நான் ஒரு ஆணுறை பரிசோதராக நடிக்கிறேன் என்று தகவல் வெளியானதும் நான் ஏதோ விளம்பரத்திற்காக செய்கிறேன்.
சர்ச்சையை கிளப்ப வேண்டும் என இந்த படத்தில் நடிக்கிறேன். என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், உண்மை அது கிடையாது.
ஆணுறை அணிந்தால் இதுதான் நடக்கும்:
ஆணுறை குறித்த விழிப்புணர்வு இன்று கூட போதிய அளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
பள்ளிப் பாடங்களில் பாலியல் கல்வி இடம்பெற வேண்டும். அதனுடைய அத்தியாவசியம் என்ன என்று பலரும் பல நாட்களாக கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது தற்போது வரை கோரிக்கையாகவே இருக்கிறது. ஆனால், படங்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடியும் என்று நான் நம்பினேன்.
இன்றளவும் கிராமப்புறங்களில் ஆணுறை குறித்த புரிதல் இல்லாமல் அது பற்றி பயந்து கொண்டு இருக்கும் பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
இதனுடைய முக்கியத்துவம் என்ன..? ஆணுறை அணிந்தால் இதுதான் நடக்கும்.. இது நடக்காது.. என ஒரு 18 வயது நிரம்பிய அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்.
இப்படி ஒரு விழிப்புணர்வு படத்தில் நாம் நடித்தால் என்ன தவறு என்று தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பேசியிருக்கிறார்.