எந்த ஆணுறை சிறந்தது.. கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங் டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். நடிகையாக வர வேண்டும் என்று கனவு கண்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளிலும் களம் இறங்கினார்.

இதையும் படிங்க: 2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!

இந்நிலையில் பதினெட்டாவது வயதிலேயே மாடலிங் தொழிலை செய்ய ஆரம்பித்த இவர் 2009-இல் கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்ததோடு தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகை ரகுல் பிரீத் சிங்..

இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ் படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் 2011-ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் கார்த்தியோடு இணைந்து நடித்து தன் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டதோடு என் ஜி கே திரைப்படத்தில் சூர்யாவோட நடித்து அசத்தினார். எனினும் இந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

எந்த ஆணுறை சிறந்தது..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளுக்காக கொக்கி போட வித விதமான உடைகளை அணிந்து கிளாமரான போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

இவர் தற்போதைய தெலுங்கானா மாநில அரசின் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.. பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்.. என்ற திட்டத்திற்கான திட்ட தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ளது.

அத்தோடு நடிகை ரகுல் பிரீத் சிங் Chhatriwali என்ற திரைப்படத்தில் ஆணுறை பரிசோதகராக நடித்திருந்தார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை ராகுல் பிரீத் சிங் நான் இந்த கதாபாத்திரம் குறித்து விரிவாக தெரிந்து கொண்ட பின்பு தான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன் எனக் கூறியுள்ளார்.

உண்மையை உடைத்த ரகுல் பிரீத்..

இதைக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் நம் ரகுல் பிரீத் சிங் இதில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது போல் பலவிதமான கலவல ரீதியான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

இதற்கு உரிய தரமான உண்மையை போட்டு ராகுல் பிரீத் சிங் கூச்சமின்றி உடைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.
அந்த வகையில் அவர் ஆணுறை குறித்து பேசுகையில் ஆணுறை குறித்த விழிப்புணர்வு இன்றளவும் மக்கள் மத்தியில் போதுமானதாக இல்லை என்பது தன்னுடைய கருத்தாக கூறினார்.

மேலும் இப்படி ஒரு கதைக்களத்தில் நடித்தால் விழிப்புணர்வு மட்டும் இல்லாமல் எந்த ஆணுறை சிறந்தது. எப்படியான ஆணுறை சிறப்பானது போன்ற விஷயங்களும் பொது மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?

எனவே தான் இதனை முகம் சுளிக்காத வகையில் படமாக்கி இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார் நடிகை ராகுல். இதன் மூலம் எந்த ஆணுறை சிறந்தது என்பது மக்களுக்கு எளிதாக எடுத்துச் செல்லப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

மேலும் ராகுல் பிரீத் சிங் கூச்சமின்றி உடைத்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர் சொல்வதில் உண்மை உள்ளது என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version