கொடைக்கானலில் இரவு 2 மணிக்கு மனைவி சரண்யாவுக்கு இயக்குனர் அமீர் செய்த கொடுமை.. பொன்வண்ணன் பேச்சு..!

இயக்குனர் அமீர் பாலா சசிகுமார் மூவருமே இயக்குனராக வேண்டும் என்பதற்காக மதுரையிலிருந்து ஒன்றாக சென்னைக்கு கிளம்பி வந்தவர்கள். ஆனால் அவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் தற்சமயம் சிறப்பான ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர்.

அதில் சசிகுமார் மற்றும் பாலா இருவருக்குமே தொடர்புடைய ஒரு நபராக இயக்குனர் அமீர் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அமீர் அதற்குப் பிறகு தனியாக திரைப்படம் எடுப்பதற்காக பாலாவிடமிருந்து பிரிந்து விட்டார்.

காதல் படத்தில் அறிமுகம்:

அப்படி அமீர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே. மௌனம் பேசியதே திரைப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கினார்.

இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்து அமீர் இயக்கிய திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் சிறப்பான ஒரு படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார்.

உண்மையில் ராம், பருத்திவீரன் இவை இரண்டும்தான் அமீர் முதலிலேயே இயக்க நினைத்த திரைப்படங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கினால் அவற்றிற்கு வரவேற்பு கிடைக்காது.

இதுதான் காரணம்:

எனவே இயக்குனராக அறிமுகமாகும்பொழுது காதல் திரைப்படத்தை வைத்து அறிமுகமாவது நல்லது என்று நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அதனை தொடர்ந்துதான் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அதேபோல ராம் திரைப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் அமீரே அந்த திரைப்படத்தை தயாரித்தார். ராம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகைக்கு வந்த கஷ்டம்:

ராம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடித்திருந்தார். அந்த படம் அனுபவங்கள் குறித்தும் அமீர் குறித்தும் நடிகர் பொன்வண்ணன் ஒரு மேடைப்பேச்சில் பேசியிருக்கிறார்.

நடிகை சரண்யாவின் கணவர்தான் பொன்வண்ணன். அவர் கூறும் பொழுது ராம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது அப்பொழுது இரவு எனக்கு போன் செய்து தினமும் எனது துணைவியார் பேசுவார். அப்படி பேசும் பொழுது இந்த இயக்குனர் என்னை இரவு ஒரு மணிக்கு அழைத்துச் சென்று ஜீவாவுடன் ரத்த காட்சிகளை படமாக்குகிறார்.

எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் ஆனால் எனக்கு அமீரை பற்றி அப்பொழுது பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் இயக்குனரிடம் இது குறித்து எப்படி நாம் சண்டை போட முடியும் என்று புரியாமல் இருந்தேன். அவ்வளவு ஈடுப்பாட்டோடு படமெடுப்பவர் அமீர் பொன்வண்ணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version